பாதாம் பிசின் என்னென்ன வேலை செய்யுது பாருங்க…!!!

Author: Hemalatha Ramkumar
28 June 2023, 2:09 pm

பாதாம் மரத்தில் வெளியாகும் கோந்து போன்ற ஒரு பொருள் பாதாம் பிசின் என்று அழைக்கப்படுகிறது. பாதாம் பிசினில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற மருத்துவங்களில் பாதாம் பிசின் பயன்படுத்தப்படுவதற்கு இதுவே காரணம். இந்த பதிவில் பாதாம் பிசின் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பாதாம் பிசினில் கொழுப்பு சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், சோடியம் போன்ற எண்ணில் அடங்காத சத்துக்கள் உள்ளது. பெரும்பாலானவர்களுக்கு பாதாம் பிசின் உடல் சூட்டை குறைக்க உதவும் என்பது தெரியும். கோடை காலத்தில் உடல் அதிக உஷ்ணமாகி பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இது போன்ற நேரங்களில் பாதாம் பிசினை இரவு ஊற வைத்து மறுநாள் காலை சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறைந்து, எந்த ஒரு வியாதியும் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்கிறது.

பாதாம் பிசினை ஜூஸ் சர்பத் போன்ற பானங்களில் கலந்து சாப்பிடலாம். இது தவிர பாதாம் பிசின் செரிமான கோளாறுகளுக்கும் தீர்வு தருகிறது. நெஞ்செரிச்சல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் பாதாம் பிசினை சாப்பிட்டால் உடனடி தீர்வு பெறலாம். மேலும் பாதாம் பிசினில் அதிக அளவு தாது பொருட்கள் இருப்பதால் இது எலும்புகளை வலுவாக வைக்க உதவுகிறது.

மேலும் தசைகளை வலுவாக்கி, உடல் வலி மற்றும் சோர்வை போக்குகிறது. பெரும்பாலான பெண்கள் அவதிப்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு பாதாம் பிசின் ஒரு அருமையான தீர்வு. மேலும் ஆண்களை பொறுத்தவரை, விந்தணுக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கும் பாதாம் பிசின் ஒரு அற்புதமான மருந்தாக அமைகிறது. என்ன சாப்பிட்டாலும் உடம்பு ஏற மாட்டேங்குது என்று வருத்தப்படுபவர்கள் பாதாம் பிசினை பாலில் கலந்து சாப்பிட்டு வர கண்டிப்பாக நல்ல ரிசல்ட் உண்டு. மேலும் நோய்கள் காரணமாக உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படுபவர்களும் பாதாம் பிசினை எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகமாகும்.

முன்கூட்டியே ஏற்படும் வயதான அறிகுறிகளை தடுக்கும் ஆற்றல் பாதாம் பிசினுக்கும் உண்டு. பாதாம் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வர நமது சருமத்திற்கு ஃப்ரீ ராடிக்கல்களை எதிர்த்து போராடக்கூடிய தன்மை கிடைக்கும். தோலில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு ஆகியவற்றையும் சரி செய்ய பாதாம் பிசின் உதவுகிறது.

பாதாம் பிசின் அனைத்து விதமான நாட்டு மருந்து கடைகள் மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் குறைவான விலையில் கிடைக்கும். எந்த ஒரு பொருளும் எளிதில் கிடைத்துவிட்டால் அதற்கு மதிப்பு இல்லாமல் போகிறது. பாதாம் பிசினும் அப்படித்தான். ஆனால் இனியும் அவ்வாறு அலட்சியமாக இருக்காமல் நம்மை சுற்றி கிடைக்கக்கூடிய ஆரோக்கியமான பொருட்களை பயன்படுத்தி பலன் அடைவோம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 3746

    1

    0