பிளாக் காபி என்பது நம்முடைய நாளை ஆரம்பிப்பதற்கான ஒரு புத்துணர்ச்சி பானமாக மட்டுமல்லாமல், நம் உடல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு விதமான நன்மைகளை தருகிறது. நம்முடைய நாளை ஒரு பிளாக் காபியோடு ஆரம்பிப்பது நம் உடல்நலனில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு பின்னணியில் உள்ள சில காரணங்களை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
கவனிப்பு திறன்
பிளாக் காபியில் காணப்படும் காஃபைன் நம்முடைய மூளைக்கு ஒரு இயற்கை பூஸ்ட்டராக அமைந்து, உங்களுடைய கவனத்திறனை அதிகரிக்கிறது. காலையில் நீங்கள் பிளாக் காபி குடிக்கும் பொழுது அன்றைய நாள் ஒரு பாசிட்டிவான அணுகுமுறையோடு ஆரம்பிக்கிறது. இதனால் உங்களுடைய வேலைகளை நீங்கள் விரைவாக செய்து முடிக்கலாம்.
உடல் திறன்
பிளாக் காபி குடிப்பது உங்களுடைய உடலில் அட்ரினலின் அளவுகளை அதிகரிக்கிறது. இது உங்களுடைய உடல் செயல்திறனை மேம்படுத்துவதற்கு மிகவும் அவசியமானது. ஆகவே காலையில் நீங்கள் வொர்க்-அவுட் செய்யக்கூடிய ஒரு நபர் என்றால் பிளாக் காபி குடிப்பது உங்களுக்கு கூடுதல் ஆற்றலை பெற்று தரும்.
உடல் எடை கட்டுப்பாடு
பிளாக் காபியில் கலோரிகள் குறைவாக இருப்பதால் இது கொழுப்பை எரிப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள காஃபைன் மெட்டபாலிசத்தை விரைவுப்படுத்தி, உடலில் உள்ள கொழுப்பை திறம்பட எரிக்கிறது. எனவே காலையில் பிளாக் காபி குடிப்பதால் உங்களுடைய உடல் எடையை பராமரிக்கலாம்
ஆன்டி-ஆக்சிடன்ட்கள்
பிளாக் காபியில் முழுக்க முழுக்க ஆன்டி-ஆக்சிடன்ட்கள் காணப்படுவதால் இது நம்முடைய உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக சண்டை போடுகிறது. இதில் உள்ள காம்பவுண்டுகள் வீக்கத்தை குறைத்து, நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியம்
மிதமான அளவு பிளாக் காபி குடிப்பதால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயங்கள் குறைவதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலையில் பிளாக் காபி குடிப்பது ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதத்தை குறைக்கிறது.
மனநிலை
பிளாக் காபியில் உள்ள காஃபைன் நம்முடைய மனநிலையை ஒழுங்கமைக்கும் டோபமைன் மற்றும் செரடோனின் ஆகிய ஹார்மோன்களை அதிகரிக்கிறது. இதனால் உங்களுடைய மன அழுத்தம் மற்றும் மனசோர்வு குறைகிறது.
இதையும் படிக்கலாமே: வயிறு நிறைய சாப்பிட்ட பிறகும் கூட ரொம்ப பசிக்குதா… அதுக்கான காரணம் இதுவா இருக்கலாம்!!!
மூளை ஆரோக்கியம்
தினமும் பிளாக் காபி குடிப்பது அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் போன்ற மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் நம்முடைய அறிவுத்திறன் செயல்பாடுகளை அதிகரிக்கிறது.
செரிமானம்
காலையில் பிளாக் காபி குடிப்பது வயிற்றில் உள்ள அமில உற்பத்தியை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
ரத்த சர்க்கரை
பிளாக் காபி குடிப்பது ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்குவதாக ஒரு சில ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன. இதனால் இது குறிப்பாக வகை 2 டயாபடீஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது.
ஆயுட்காலம்
தினமும் காலை பிளாக் காபி குடிப்பதால் நம்முடைய ஆயில் அதிகரிக்கிறது என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சொல்லப்படுகிறது. பிளாக் காபியில் உள்ள ஆரோக்கியமான காம்பவுண்டுகளே இதற்கு காரணம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
This website uses cookies.