உங்க ஆரோக்கியத்திற்கு சரியான காவல் தெய்வம் இது தான்…!!!

Author: Hemalatha Ramkumar
6 December 2024, 10:43 am

தினமும் உங்களுடைய உணவில் கருப்பு மிளகை சேர்த்து சாப்பிடுவது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உங்களுடைய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ‘மசாலாக்களின் ராஜா’ என்று அழைக்கப்படும் இந்த கருப்பு மிளகு சமையலில் மட்டும் அல்லாமல் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் தனித்துவமான பல்வேறு பலன்களை அளிக்கிறது. இந்த சிறிய கருப்பு விதைகளில் காணப்படும் பைப்பரின் என்ற ஒரு காம்பவுண்ட் மிளகின் ஃப்ளேவர் மற்றும் ஆரோக்கிய பண்புகளுக்கு காரணமாக அமைகிறது. அது மட்டுமல்லாமல் கருப்பு மிளகு செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி, உணவு உடைக்கப்படுவதற்கு உதவுவதன் மூலமாக  செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. 

மேலும் கருப்பு மிளகில் ஆன்டி- ஆக்சிடன்ட்கள் அதிகம் இருக்கும் காரணத்தால் இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இதனால் நாள்பட்ட நோய்களுக்கான அபாயம் குறைகிறது. எனவே கருப்பு மிளகை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நம்ப முடியாத ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி 

வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான எளிமையான வழிகளில் ஒன்று உங்களுடைய உணவில் கருப்பு மிளகை சேர்த்து சாப்பிடுவது. ரத்த வெள்ளை அணுக்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக சண்டை போடுவதற்கு மிகவும் அவசியமான ஒன்று. தொற்றுகள் அதிகம் ஏற்படும் இந்த குளிர்காலத்தில் குறிப்பாக மிளகு சாப்பிடுவது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எந்த விதமான உடல்நல தொற்றுகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கும்.

செரிமானம் 

நாம் ஏற்கனவே கூறியது போல கருப்பு மிளகு வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் உற்பத்தியை தூண்டுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தி ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது. மேலும் கருப்பு மிளகு வயிற்று உப்புசம் மற்றும் வாயு தொல்லை போன்ற இரைப்பை குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் தருகிறது.

இதையும் படிக்கலாமே: இனி குழந்தைகளுக்கு வீட்லயே டேஸ்டா தக்காளி ஜாம் செய்து கொடுங்க!!!

சருமம் மற்றும் தலைமுடி 

மயிர்க்கால்களை ஆற்றி இளநரையை போக்கி பொடுகு பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு கருப்பு மிளகு உதவும் என்பது பலருக்கு தெரிவதில்லை. மேலும் இது சருமத்தில் பிக்மென்ட்டேஷனை இழக்க செய்யும் விட்டிலிகோ என்ற சரும நிலையை சரி செய்வதற்கும் உதவுகிறது.

புற்றுநோய் 

கருப்பு மிளகு எதிர்த்து போராடும் பண்புகள் இருப்பதால் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

ரத்த சர்க்கரையை அளவுகள் 

ரத்த குளுக்கோஸ் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதற்கு கருப்பு மிளகு சிறந்த முறையில் உதவுகிறது. மேலும் இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி டயாபடீஸ் பிரச்சனைக்கு ஒரு அற்புதமான இயற்கை மருந்தாக அமைகிறது. எனவே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு கருப்பு மிளகை உங்களுடைய அன்றாட உணவில் சேர்த்து வர மறக்காதீர்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!