தினமும் ஒரு கப் வெள்ளரிக்காய் மற்றும் கேரட் ஜூஸ் குடிப்பது நமக்கு புத்துணர்ச்சி அளித்து, தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு சுவையானதாகவும் அமைகிறது. இந்த ஆரோக்கியமான ஜூஸ் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நமக்கு தேவையான நீர்சத்தை வழங்குகிறது. வெள்ளரிக்காய் மற்றும் கேரட் என்ற அற்புதமான காம்பினேஷன் நம்முடைய உடல் நலனை மேம்படுத்த உதவும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. கேரட்டுகளில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் A அதிகமாக இருக்கும் போது வெள்ளரிக்காய் நமக்கு நீர்ச்சத்தையும் அத்தியாவசிய தாதுக்களையும் வழங்குகிறது. கேரட் ஜூஸ் குடிப்பது நல்ல பார்வை திறன், தெளிவான சருமம் மற்றும் வலிமையான நோய் எதிர்ப்பு அமைப்பை வழங்குகிறது. அதே நேரத்தில் வெள்ளரிக்காய் ஜூஸ் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி, செரிமானத்தை மேம்படுத்தி, உடலை குளுமைப்படுத்துகிறது. எனவே தினமும் வெள்ளரிக்காய் மற்றும் கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமான இதயம்
கேரட் ஜூஸில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வைட்டமின் E மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும்.
இதையும் படிக்கலாமே: காலை விழிக்கும் போதே மினுமினுக்கும் சருமத்தை பெற நைட் நீங்க யூஸ் பண்ண வேண்டிய பொருள் இது தான்!!!
புற்றுநோய் தடுப்பு
கேரட்டுகளில் கரட்டினாய்டுகள் அதிகம் இருப்பதால் இது நம்முடைய DNAக்களுக்கு ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. இது குறிப்பாக பல சூழ்நிலைகளில் புற்றுநோயை ஏற்படுத்துவதற்கு ஒரு முக்கியமான காரணியாக அமைகிறது.
நல்ல பார்வை திறன்
கேரட்டில் காணப்படும் லியூட்டின் மற்றும் ஜியாசான்தைன் போன்ற கரட்டினாய்டுகள் கண்களின் லென்ஸ் மற்றும் ரெட்டினாவை பாதுகாத்து ஆரோக்கியமான பார்வை திறனை வழங்குகிறது.
டயாபடீஸ்
வெள்ளரிக்காய் சாற்றில் முழுக்க முழுக்க ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருப்பதால் இது நம்முடைய உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி டயாபடீஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
வீக்க எதிர்ப்பு பண்புகள்
வெள்ளரிக்காய் சாற்றில் காணப்படும் வைட்டமின்கள் A, C, D மற்றும் K ஆகியவை பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு எதிராக போராட உதவுகிறது. குறிப்பாக இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் கால்சியம் நம்முடைய உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.