தயிரோடு கைகோர்த்து கேன்சரை விரட்டும் மசாலா பொருள்!!!

Author: Hemalatha Ramkumar
17 September 2024, 10:53 am

இனிப்பான சுவை மற்றும் தனித்துவமான ஃப்ளேவர் கொண்ட ஒரு பிரபலமான மசாலா பொருளான இலவங்கப்பட்டையை பால் அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அதன் பலன்கள் பல மடங்காக அதிகரிக்கிறது. இந்த வாசனை நிறைந்த மசாலாவில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வீக்க எதிர்ப்பு பண்புகள் மற்றும் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் பண்புகள் ஆகியவை காணப்படுகின்றன. இப்போது பால் அல்லது தயிரில் இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பயன்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

சிறந்த ஃப்ளேவர் மற்றும் வாசனை இலவங்கப்பட்டையின் அருமையான ஃப்ளேவர் மற்றும் வாசனை பால் மற்றும் தயிரின் சுவையை அதிகரிக்கிறது. நீங்கள் இனிப்பாக சாப்பிட விரும்பினாலும் சரி அல்லது காரமாக சாப்பிட விரும்பினாலும் சரி இலவங்கப்பட்டை பொடியை இது இரண்டிற்குமே பயன்படுத்தலாம். இது உங்களுடைய பானங்களுக்கு ஆழமான ஒரு ஃப்ளேவரை சேர்த்து கொடுக்கிறது.

ஆன்டி-ஆக்சிடன்ட்

பாலிபீனால்கள் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்களின் மூலமாக இலவங்கப்பட்டை திகழ்கிறது. இந்த காம்பவுண்டுகள் இதய நோய், புற்றுநோய் மற்றும் முன்கூட்டிய வயதான அறிகுறிகள் போன்ற நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடைய தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை சேதப்படுத்துவதில் இருந்து பாதுகாக்கிறது.

வீக்க எதிர்ப்பு பண்புகள்

பட்டையில் சிறந்த வீக்க எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. வீக்கம் காரணமாக ஆர்த்ரைட்டிஸ், இதய நோய் மற்றும் செரிமான பிரச்சனைகள் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்கும் விளைவுகள் இலவங்கப்பட்டை ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்க உதவும் என்பது பல்வேறு ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக டயாபடீஸ் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் அல்லது டயாபடீஸ் பிரச்சனை ஏற்படுவதற்கான அபாயத்தில் இருக்கும் நபர்களுக்கு பயனளிக்கும்.

சிறந்த செரிமானம் இலவங்கப்பட்டை பாரம்பரியமாக செரிமானத்தை ஊக்குவிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டுகிறது. மேலும் ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உறிஞ்சப்படுவதை உறுதி செய்து, வயிற்று உப்புசம் மற்றும் வாயு போன்ற அறிகுறிகளை குறைக்கிறது.

இலவங்கப்பட்டை பொடியை கொண்டு செய்யக்கூடிய பானங்கள்:- இலவங்கப்பட்டை பால்

ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை ஒரு கப் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த பாலில் சேர்க்கவும். இலவங்கப்பட்டை தூள் கரையும் வரை நன்றாக கலக்கவும்.

இலவங்கப்பட்டை தயிர்

உங்களுக்கு மிகவும் விருப்பமான ஃப்ளேவர் செய்யப்பட்ட தயிரில் இலவங்கப்பட்டை பொடி சேர்த்து அதனை இன்னும் சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றுங்கள். இதில் உங்களுக்கு விருப்பமான பழங்கள், நட்ஸ் வகைகள் போன்றவற்றையும் சேர்க்கலாம்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!