தம்மாத்துண்டு புல்லு கேன்சர் வராமல் தடுக்கணும்னு சொல்றாங்க!!!
Author: Hemalatha Ramkumar8 January 2025, 7:33 pm
லெமன் கிராஸ் டீ பற்றி பலர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த அதிக ஆற்றல் தரும் மற்றும் ஆரோக்கியமான டீ நம்முடைய வாழ்க்கைமுறை மாற்றங்களில் நாம் ஏற்படுத்தக்கூடிய மிகச்சிறந்த ஒன்றாக இருக்கும். லேசான சிட்ரஸ் ஃபிளேவருடன் அற்புதமான வாசனை கொண்ட இந்த லெமன் கிராஸ் டீயில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்திருப்பதால் இது வீக்கத்தை எதிர்த்து போராடவும், நம்முடைய நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த டீ செரிமான கோளாறுகளை சரிசெய்து வயிற்று உப்புசத்தை குறைக்கிறது.
ஆரோக்கியமான மற்றும் சுவையான லெமன் கிராஸ் டீ நம்முடைய உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி, ஆரோக்கியமான சருமத்தை வழங்குகிறது. மேலும் இதனை வழக்கமான முறையில் பருகி வந்தால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும். ஆகவே தினமும் லெமன் கிராஸ் டீ குடிப்பதால் நமக்கு கிடைக்கும் பயன்கள் பற்றி இந்த பதிவை பார்க்கலாம்.
புற்றுநோய்
ஆன்டி கேன்சர் பண்புகளுக்கு பெயர் போன இந்த லெமன் கிராஸ் டீ ஒரு சில கேன்சர் செல்களை அழித்து, அவற்றிற்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது. இயற்கையான டீ-டாக்சிஃபையராக செயல்பட்டு உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அகற்றி நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
செரிமானம்
வயிற்று உப்புசம், கேஸ்டிரிக் கோளாறுகள், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு லெமன் கிராஸ் டீ ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இது குடலில் உள்ள இயக்கங்களை தூண்டி செரிமானத்தை மேம்படுத்துகிறது.
இதையும் படிக்கலாமே: தயிரோடு இந்த ஒரு பொருளை கலந்து சாப்பிட்டு பாருங்க… செரிமான பிரச்சனை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!!
உடல் எடை குறைய
அதிகப்படியான உடல் கொழுப்பை குறைத்து, மெட்டபாலிசத்தை அதிகரித்து, பசியை கட்டுப்படுத்துவதன் மூலமாக இந்த லெமன் கிராஸ் டீ உடனடியாக குறைப்பதற்கு சிறந்த முறையில் செயல்படுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கிறது
இயற்கையான முறையில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைப்பதற்கு லெமன் கிராஸ் டீயை தினமும் பருகி வாருங்கள். அதுமட்டுமல்லாமல் இது நல்ல தூக்கத்தை வரவழைத்து உங்கள் உடலுக்கு ஓய்வளிக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.