இந்த ஒரு பொருள் வீட்டில் இருந்தால் போதும்… டாக்டர் கூடவே இருந்தா மாதிரி இருக்கும்!!!
Author: Hemalatha Ramkumar17 June 2023, 6:20 pm
அதிக மருத்துவ குணங்கள் உடைய உணவுப் பொருட்களில் முதன்மையானது தேன் ஆகும். கண்டிப்பாக அனைவரது வீடுகளிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான உணவு பொருள் ஸ்கேன் ஆகும். இதன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்று தேன்.
தேனில் கொம்புத் தேன், மலைத் தேன், புற்றுத் தேன், பொந்துத் தேன் மற்றும் மனைத் தேன் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. சுத்தமான தேனில் உடலுக்கு தேவையான பல வகை ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. 50 கிராம் அளவுள்ள தேனில் சுமார் 125 கலோரிகள் அடங்கியுள்ளது.
காடுகள் மற்றும் மலைகளில் இருந்து சேகரிக்கப்படும் தேனில், மருத்துவ குணம் நிறைந்து காணப்படுவதால் ஆயுர்வேதத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தேனில் ஜீரண சக்தி அதிகமாக இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்த்து கொடுக்கும்போது ஜீரண பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் மருந்து இரத்தத்தில் எளிதில் கலந்து விரைவாக செயல்படத் தொடங்குகிறது.
தொடர்ந்து உணவுப் பொருட்களுடன் தேன் கலந்து உண்பதால் ஏற்படும் நன்மைகள் ஒரு சிலவற்றை காண்போம்:
ஜீரண சக்தி அதிகமாக இருப்பதால் உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து மலச்சிக்கலை போக்குகிறது.
மனிதனின் உள் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கல்லீரல் ஆகும். பால் மற்றும் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து உண்ணும் போது கல்லீரலில் உள்ள நச்சு கழிவுகள் நீக்கப்பட்டு கல்லீரல் பலமடைகிறது.
தினம்தோறும் தேனை அருந்தினால் நமது உடலில் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகரித்து எலும்புகள் மற்றும் தசைகள் வலிமை அடைகிறது. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் இரவில் வரக்கூடிய வரட்டு இருமல் கட்டுப்படுத்தப்படுகிறது.
வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சாறு கலந்து மற்றும் தேன் கலந்து அருந்தினால், ஜலதோஷம், தலைவலி, வாந்தி போன்ற நோய்கள் குணமாகும்.
தேன் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பலவிதமான நோய் தொற்றுகள் ஏற்படாமல் நம் உடலை பாதுகாக்கிறது.
தேன் புற்றுநோய் செல்களை எதிர்த்து அழிக்கக்கூடிய ஆற்றல் உடையது. எனவே தொடர்ந்து தேன் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் பரவாமல் தடுக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
0
0