தினமும் ஒரு சொட்டு தேனை தொப்புளில் தடவி பாருங்க… எந்த நோயும் உங்களை நெருங்காது!!!

Author: Hemalatha Ramkumar
28 May 2023, 11:07 am

தேன் சாப்பிட யாருக்குத் தான் பிடிக்காது…? ஆனால் தேன் சுவையானது மட்டுமல்ல, சத்தானதும் கூட. பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் நிறைந்த தேன், பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பழங்காலத்திலிருந்தே தேன் ஆயுர்வேத மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுவையை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், சருமம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குவதில் தேன் பயனுள்ளதாக இருக்கும். தொப்புளில் தேன் தடவுவதால் ஏற்படும் சில நன்மைகள் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த தேன் தொற்றுநோயைத் தவிர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு துளி இஞ்சி சாறு மற்றும் தேன் கலந்து தொப்புளில் தடவுவது பயனுள்ளதாக இருக்கும்.

வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபட தேன் சிறந்தது. இஞ்சி சாற்றில் தேன் கலந்து தொப்புளில் பயன்படுத்துவது செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது தவிர, வயிற்றுவலி மற்றும் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபட உதவுகிறது.

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையின் காரணமாக பலர் தங்கள் சருமத்தை பராமரிக்க தவறி விடுகின்றனர். இந்த விஷயத்தில், தேன் உங்களுக்கு உதவும். இதற்கு தினமும் தொப்புளில் தேன் தடவவும். இது ஒரு சில நாட்களிலே உங்கள் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.

தினமும் தேனை உட்கொள்வதன் மூலமும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இது தவிர தொப்புளில் தேனை தடவுவதன் மூலமும் இந்த பிரச்சனையை போக்கலாம். இரவில் தூங்கும் முன் பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • celebrity reply to Sathyaraj's daughter who criticized Vijay விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!