நீரிழிவு நோயாளிகள் காளான்கள் சாப்பிடுவதால் ஏதும் பிரச்சினை வந்துவிடாதே???
Author: Hemalatha Ramkumar9 September 2024, 5:45 pm
காளான்கள் என்பது பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உள்ளது. இது சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் நமக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. டயாபடீஸ் நோயாளிகளை பொறுத்தவரை அவர்கள் சாப்பிடும் டயட்டில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அந்த வகையில் காளான் சாப்பிடலாமா என்ற சந்தேகம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படலாம். காளான்களில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் டயாபட்டீஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகிறது. காளான்களில் குறைவான கலோரிகள், கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் இது சரிவிகித டயாபட்டிக் டயட்டின் ஒரு அற்புதமான கூடுதலாக அமைகிறது. மேலும் காளான்களில் உள்ள புரோட்டின், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் கொலஸ்ட்ராலை சீராக பராமரிக்கிறது.
காளான்கள் சாப்பிடுவதால் டயாபடீஸ் நோயாளிகளுக்கு கிடைக்கும் பலன்கள் குறைந்த கிளைசிமிக் எண் டயாபட்டிஸ் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு காளான்கள் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய மிக முக்கியமான நன்மைகளில் இதுவும் ஒன்று. கிளைசிமிக் எண் என்பது ஒரு உணவிலிருந்து கார்போஹைட்ரேட் எவ்வளவு விரைவாக உறிஞ்சப்பட்டு, ரத்த ஓட்டத்தில் கலந்து அது ரத்த சர்க்கரை அளவுகளை பாதிக்குது என்பதற்கான அளவீடு. இந்த அளவீடு கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ள காளான்களில் அளவிட முடியாத சிறிய அளவிலான தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது. இதனால் டயாபடீஸ் நோயாளிகள் தயக்கமில்லாமல் பாதுகாப்பாக காளான்களை சாப்பிடலாம்.
அதிக இன்சுலின் சென்சிட்டிவிட்டி
காளான்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலமாக இன்சுலின் நமது உடலில் திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுப்படுத்தப்பட்டு வகை 2 நீரழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது.
வீக்கத்தை குறைக்கிறது நாள்பட்ட வீக்கம் என்பது நீரழிவு நோயுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. காளான்களில் உள்ள காம்பவுண்டுகளில் வீக்கம் எதிர்ப்பு பண்புகள் காணப்படுவதால் டயாபடீஸ் நோயாளிகளுக்கு இது உகந்தது.
உடல் எடையை கட்டுப்படுத்துகிறது காளான்களில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் இது உடல் எடையை பராமரிப்பதற்கு பெரிதும் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.
இதய ஆரோக்கியம்
காளான்கள் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கும் நீரிழிவு நோய் காரணமாக ஏற்படும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அபாயத்தை குறைக்கவும் உதவுவதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் பிற நீரழிவு நோய் தொடர்புடைய விஷயங்களில் காளான்கள் தாக்கங்களைக் கொண்டிருப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது. காளான்களில் காணப்படும் இயற்கை பயோ ஆக்டிவ் பொருட்கள் ஆன்டி டயாபெட்டிக் அதாவது நீரிழிவு நோய்க்கு எதிரான விளைவுகளை கொண்டுள்ளன. அது மட்டும் அல்லாமல் காளான்கள் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை ஊக்குவிக்கவும், புற்றுநோய்க்கு எதிராக செயல்படவும் உகந்தது. ஆகவே நீரழிவு மேலாண்மையை இயற்கையான முறையில் ஊக்குவிக்க காளான்கள் சிறந்தவை.