தற்போது ஓட்ஸ் என்பது பலராலும் விரும்பி சாப்பிடப்படும் பிரபலமான ஒரு உணவுப் பொருளாக உள்ளது. இது சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. நீரழிவு நோய், இதயம் சார்ந்த பிரச்சனைகள், ரத்த அழுத்தம் மற்றும் பல பிரச்சனைகளை ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலமாக நாம் கட்டுப்படுத்தலாம். இந்த பதிவில் தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் ஓட்ஸ் சாப்பிடலாமா கூடாதா என்பது குறித்து பார்க்கலாம்.
கழுத்துப் பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கக்கூடிய ஒரு சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. தைராய்டு சுரப்பியில் ஏதேனும் சிக்கல் ஏற்படும் பொழுது தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியில் பிரச்சனை உண்டாகிறது. தைராய்டு ஹார்மோன்கள் சுவாசித்தல், செரிமானம், உடல் எடை, இதயத்துடிப்பு போன்ற பலவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டு ஹார்மோன்களின் சரியான உற்பத்திக்கு சரியான உணவுகளை சாப்பிடுவது அவசியம்.
அந்த வகையில் தைராய்டு ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஓட்ஸில் நிறைந்துள்ளது. வைட்டமின் பி, வைட்டமின் இ, சின்க், காப்பர், மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்து போன்ற அனைத்தும் தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை மேம்படுத்தி அதன் சமநிலையை உறுதிப்படுத்துகிறது.
அது மட்டுமல்லாமல் ஓட்ஸில் காணப்படும் அயோடின் தைராய்டு சுரப்பியின் சரியான செயல்பாட்டை உறுதி செய்கிறது. தைராய்டு சுரப்பியில் ஏற்படும் வீக்கம் மற்றும் தைராய்டு தொடர்பான நோய்களை விரட்டக்கூடிய பாலிசியினால்களும் ஓட்ஸில் காணப்படுகிறது.
ஓட்ஸ் சாப்பிடுவது தைராய்டு ஆரோக்கியத்தை மட்டும் அல்லாமல் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு ஓட்ஸில் குறைந்த கிளைசீமிக் அளவு இருப்பதன் காரணமாக இது நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது.
உங்கள் தைராய்டு பிரச்சனையின் தீவிரத்தை பொறுத்து ஒரு நாளைக்கு 30 கிராம் முதல் 50 கிராம் வரையிலான ஓட்ஸை நீங்கள் உட்கொள்ளலாம். ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் உப்புமா, ஓட்ஸ் ஸ்மூத்தி, ஓட்ஸ் தோசை போன்ற பல ரெசிபிகள் ஓட்ஸ் கொண்டு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் செய்யப்படலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவை எதிர்த்து ரஜினிகாந்த் 1995ல் அனல் பறக்க பேசியது யாரும் மறக்க முடியாது. வெடிகுண்டு கலாச்சாரத்தை பற்றி…
ஆந்திர துணை முதல்வர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை…
19 வயது இளம்பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டுப் பாலியல் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்து. உத்தரபிரதேச மாநிலம்…
வணிக போர் சீனா மீதான வணிகப் போரை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய சக்தி…
திருப்பூர் கோவில்வழியை சேர்ந்தவர்கள் பாபு(வயது 47), இளையராஜா(38). பனியன் நிறுவன தொழிலாளர்கள். கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த 15…
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
This website uses cookies.