குளிர் காலத்தில் தலைமுடிக்கு எண்ணெய் மசாஜ் பண்றதுல இவ்ளோ பவர் இருக்கா…???

Author: Hemalatha Ramkumar
7 January 2025, 10:26 am

பொதுவாகவே குளிர்காலங்களில் நம்முடைய தலைமுடிக்கு எக்கச்சக்கமான சவால்கள் ஏற்படும். வீட்டிற்குள் இருக்கும் வெப்பம் மற்றும் வீட்டிற்கு வெளியே இருக்கும் குளுமையான காற்று தலைமுடியின் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி, அதனை எளிதாக உடைந்து போவதற்கும், சிக்கு ஏற்படுவதற்கும், வறண்டதாக மாற்றுவதற்கும் காரணமாக அமைகிறது. இந்த சேதங்களில் இருந்து உங்களுடைய தலைமுடியை பாதுகாத்து அதனை ஆரோக்கியமாகவும் அதே நேரத்தில் அழகான தோற்றத்தோடும் வைப்பதற்கு தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது என்பது ஒரு முக்கியமான பழக்கமாக அமைகிறது. தலைமுடிக்கு எண்ணெய் வைக்கும் போது மயிர் கால்களுக்கு தேவையான போஷாக்கு கிடைத்து, தலைமுடி வலிமையாகவும், பளபளப்பாகவும் மாறுகிறது.

இந்த தலைமுடி பராமரிப்பு வழக்கம் தலைமுடியின் இயற்கையான எண்ணெய்யைகள் ஆழமாக ஊடுருவுவதற்கும், அதற்கு தேவையான ஈரப்பதத்தையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. அடிக்கடி தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்து, அதன் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகு போன்ற பிரச்சினைகளில் இருந்து தடுக்கிறது. எனவே குளிர்காலத்தில் தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் பயன்கள் ஒவ்வொன்றை பற்றியும் இப்பொழுது பார்க்கலாம்.

வறட்சி 

தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற இயற்கையான எண்ணெய்யைகள் இழந்த ஈரப்பதத்தை மீட்டெடுப்பதற்கு உதவுகிறது. இந்த எண்ணெய் மயிர்க்கால்களுக்குள் ஆழமாக ஊடுருவி, அதற்கு தேவையான ஈரப்பதத்தையும், சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பாகவும் அமைகிறது.

பொடுகை குறைக்கிறது 

வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது மயிர்க்கால்களில் ஏற்படும் தொற்றுகளை எதிர்த்து போராடவும், பொடுகை விரட்டவும் உதவுகிறது.

தலைமுடி வளர்ச்சி 

தலைமுடிக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்யும் பொழுது மயிர் கால்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, அதன் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.

இதையும் படிக்கலாமே: நீங்க மன அழுத்தத்துல இருக்கும் போது உங்க முகத்துல இந்த அறிகுறிகள் கட்டாயம் வரும்!!!

தலைமுடியின் அமைப்பு இயற்கையான எண்ணெய்யைகள் தலைமுடியின் பளபளப்பு தன்மையை மீட்டெடுத்து, அதனை மென்மையாக மாற்றுகிறது. இந்த கூடுதல் பளபளப்பு ஆரோக்கியமான ஈரப்பதம் நிறைந்த தலைமுடிக்கு ஒரு அடையாளமாக அமைகிறது. எண்ணெய் வைக்கும் பொழுது தலைமுடியை நாம் எளிதாக கையாளலாம். நமக்கு பிடித்தமான வழியில் சீப்பு பயன்படுத்தி அழகுப்படுத்திக் கொள்ளலாம்.

சிக்கு ஏற்படாமல் குறைக்கிறது 

ஒரு சிறிய அளவு எண்ணெயை தலைமுடியை நுனியில் தடவும் பொழுது அது சிக்குகளை கட்டுக்குள் வைத்து, அதே நேரத்தில் உங்களுடைய தலைமுடியின் பளபளப்பை அதிகரிக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Tiruppur Subramaniam about Madha Gaja Raja movie to set current mode of Cinema ட்ரெண்டுக்கு செட்டாகுமா மதகஜராஜா.. முக்கிய பிரபலம் திடீர் கருத்து!
  • Views: - 69

    0

    0

    Leave a Reply