குளிர்காலத்தில் ஏற்படும் அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு சொல்யூஷன் போதும்!!!

Author: Hemalatha Ramkumar
25 December 2024, 6:19 pm

பெட்ரோலியம் ஜெல்லி என்றாலே நம்முடைய ஞாபகத்திற்கு முதலில் வருவது கடினமான, வறட்சி நிறைந்த மாதங்கள் தான் முதலில் தோன்றுகிறது. பெட்ரோலியம் ஜெல்லி என்பது அரிப்பு மற்றும் வெள்ளை நிற திட்டுகளை எதிர்த்து போராடுவதற்கான சிறந்த தீர்வாக அமைகிறது. குளிர்காலம் என்பது சருமத்தில் பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். அவற்றில் தோலில் ஏற்படும் விரிசல்கள் மற்றும் வறட்சி போன்றவை அடங்கும். சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கவும், நீண்ட கால சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் பெட்ரோலியம் ஜெல்லி ஒரு நம்பகமான பதிலாக அமைகிறது. குளிர் காலத்தில் உங்களுடைய நெருங்கிய நண்பராக பெட்ரோலியம் ஜெல்லியை ஏன் கொண்டிருக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.

குளிர்காலத்தில் பெட்ரோலியம் ஜெல்லியின் நன்மைகள் 

பிரபலமாக பலரிடையே இருக்கும் நம்பிக்கைக்கு மாறாக பெட்ரோலியம் ஜெல்லி என்பது பல சரும பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமைகிறது. சருமத்தில் உள்ள டானை போக்கி, சோர்வாக இருக்கும் சருமத்தை ஆற்றுவதற்கு இது பயன்படுகிறது. சிறிய பட்ஜெட்டில் வறண்ட தோலை சமாளிப்பதற்கு பெட்ரோலியம் ஜெல்லி உதவுகிறது. பல தலைமுறைகளாக கடினமான மற்றும் விரிசல் நிறைந்த தோலை சரி செய்து அதற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குவதற்கு இது ஒரு அற்புதமான கருவி.

குளிர்காலத்தில் நம்முடைய தோலில் இருக்கும் ஈரப்பதம் அதிவிரைவாக குறையக்கூடும். பெட்ரோலியம் ஜெல்லி சருமத்தின் மேற்பரப்பை பாதுகாப்பதற்கான ஒரு அடுக்காக செயல்பட்டு, ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. அதிக வறட்சி நிறைந்த கைகள், முட்டி பகுதி, கால்கள் உதடுகள் போன்றவற்றில் நீங்கள் பெட்ரோலியம் ஜெல்லியை வழக்கமான முறையில் பயன்படுத்தினால் அந்த இடத்தில் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். மேலும் இது சருமத்தில் ஏற்படும் எரிச்சலையும் போக்குகிறது.

குளிர்காலத்தில் பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்துவது எப்படி?

சருமத்தை சுத்தம் செய்வதற்கு முதலில் நீங்கள் பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்த விரும்பும் இடத்தையோ அல்லது முகத்தையோ வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் கிளென்சர் பயன்படுத்தி சுத்தம் செய்யவும். பிறகு ஒரு துண்டு வைத்து தோலை ஒத்தி எடுக்கவும். அதில் லேசாக ஈரப்பதம் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். அதன் பிறகு பெட்ரோலியம் ஜெல்லியை தடவினால் ஈரப்பதம் தக்க வைக்கப்படும்.

ஒரு மெல்லிய அடுப்பை பயன்படுத்தவும்

ஒரு சிறிய அளவு பெட்ரோலியம் ஜெல்லியை எடுத்து அதனை உங்கள் விரல்களில் தடவி பின்னர் கூடுதல் ஈரப்பதம் தேவைப்படும் கைகள், முட்டி, கால்கள் அல்லது உதடுகளுக்கு பயன்படுத்தவும்.

இதையும் படிக்கலாமே: இஞ்சி டீ vs கிரீன் டீ: குளிர்காலத்திற்கு ஏற்றது எது???

ஆழமான ஈரப்பதத்திற்கு மூடி வைக்கவும் 

பெட்ரோலியம் ஜெல்லியை உங்களுடைய கைகள், கால்கள் போன்ற பகுதியில் தடவிய பிறகு தக்க வைப்பதற்கு சாக்ஸ் அல்லது கிளவுஸ் பயன்படுத்துங்கள். தேவைப்படும் போது மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும். ஒருவேளை நீங்கள் உங்கள் முகத்திற்கு பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தி இருந்தால் ஒரு சாஃப்ட் கிளென்சர் அல்லது வைப்ஸ் பயன்படுத்தி சருமத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள் இது சரும துளைகளில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 39

    0

    0

    Leave a Reply