எப்போதும் டயர்டா இருக்கா… மாதுளம் ஜூஸ் குடிங்க… இரண்டே நிமிடத்தில் சுறுசுறுப்பாகிடுவீங்க!!!
Author: Hemalatha Ramkumar18 May 2023, 10:45 am
அனைவருக்கும் பிடித்தமான மாதுளம் பழம் நமது ஆரோக்கியத்திற்கு பல வகையில் உதவுகிறது. மாதுளம் பழத்தில் இரும்பு சத்து உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மாதுளையில் காணப்படுகிறது. மாதுளம்பழம் சாப்பிட்டால் கர்ப்பப்பை வலுப்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இது நரம்பு வீக்கத்தை குணப்படுத்த உதவுகிறது என்பதை என்பது பலருக்கு தெரியாது. மாதுளம் பழத்தில் காணப்படும் ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் தாதுக்கள் நரம்புகள் மற்றும் தசைகளுக்கு வலு சேர்கிறது.
மாதுளம் பழத்தில் காணப்படும் எலாகிடானின்ஸ் என்ற பாலிபீனால்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. அதோடு இது நரம்புகளை வலுப்பெறச் செய்கிறது. மாதுளம் பழத்தில் காணப்படும் மெக்னீசியம் நரம்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மாதுளம் பழம் உடலில் உள்ள கார்ட்டிசால் ஹார்மோனின் அளவை குறைத்து தசைகளின் வலிமையை அதிகரிக்கிறது. இதைத் தவிர மாதுளம் பழத்தில் இரும்பு சத்து காணப்படுவதால் இது ரத்த சோகையை போக்க உதவுகிறது.மேலும் தசைகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக தசைகளின் ஆரோக்கியத்தை மாதுளம் பழம் கவனித்துக் கொள்கிறது.
மாதுளம் பழத்தின் நன்மைகளை பெறுவதற்கு நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு மாதுளம் பழத்தை சாப்பிடலாம் அல்லது சாறாக பிழிந்தும் குடிக்கலாம். மாதுளம் பழத்தை சாறாக அருந்துவது தசைகள் மற்றும் நரம்புகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.