கஞ்சி தண்ணீர் மூலம் வெயிட் லாஸ் பண்ணலாமா… கேட்கவே நல்லா இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
4 December 2024, 11:01 am

அரிசியை வேக வைப்பதால் கிடைக்கும் கஞ்சி தண்ணீர் என்பது முழுக்க முழுக்க மாவுச்சத்து நிறைந்த ஒரு ஊட்டச்சத்து பொருள். கழிவாக நினைத்து சமையல் அறையில் இருந்து வெளியேற்றப்படும் இந்த கஞ்சி தண்ணீர் உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதில் கஞ்சி தண்ணீர் எப்படி உதவுகிறது என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

உங்களுடைய நாளை ஒரு டம்ளர் கஞ்சி தண்ணீருடன் வெறும் வயிற்றில் ஆரம்பிப்பது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் பல நன்மைகளை செய்யும். நாள் முழுவதும் பசியை கட்டுப்படுத்தி, அதன் மூலமாக நீங்கள் குறைவான கலோரிகளை எடுத்துக் கொள்வதற்கு இது உதவுகிறது.

உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு டம்ளர் கஞ்சி தண்ணீர் குடிப்பது நீங்கள் சாப்பிடும் உணவில் 10 முதல் 15 சதவீதத்தை குறைக்கும் என்று பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஞ்ச தண்ணீரில் குறைவான கலோரிகளும் அதிக நீர்ச்சத்தும் இருப்பதால் இது நம்முடைய ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலை குறைக்கிறது.

இதையும் படிக்கலாமே:  உடலுக்கு வலு சேர்க்கும் கருப்பு கவுனி அரிசி கஞ்சி!!!

ஒருவேளை உங்களுக்கு இனிப்புகள் மிகவும் பிடிக்கும் என்றால் ஆரோக்கியமான ஸ்மூத்தி செய்வதற்கு ஒரு பேசாக இந்த கஞ்சி தண்ணீரை நீங்கள் பயன்படுத்தலாம். ஸ்மூத்திக்கு பதிலாக கஞ்சி தண்ணீரை பயன்படுத்துவது உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல் உங்களுடைய உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் இது உதவுகிறது. இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வில் பங்கேற்ற நபர்கள் 6 மாதங்களுக்கு கஞ்சி தண்ணீர் பருகி வந்ததன் விளைவாக அவர்களுடைய உடல் எடையில் 5 முதல் 10 சதவீதத்தை இழந்தனர்.

சூப் செய்யும் பொழுது இந்த கஞ்சி தண்ணீரை நீங்கள் பேசாக பயன்படுத்தலாம். சூப் பொதுவாக பசியை அதிகரித்து, நீங்கள் சாப்பிடும் கலோரிகளின் அளவை 20% குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது உடல் எடையை குறைப்பதற்கு ஒரு அற்புதமான யுக்தியாக அமைகிறது.

கிரீன் டீ நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் என்பதை நாம் அறிவோம். இதோடு அரிசி தண்ணீரை சேர்ப்பது உடல் எடையை குறைப்பதற்கு உதவியாக இருக்கும். மிதமான உடற்பயிற்சியின் போது கொழுப்பு ஆக்ஸிடேஷனை அதிகரித்து உடல் எடை குறைப்பதை 17 சதவீதம் மேம்படுத்துவதற்கு உதவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Kalaiyarasan future plans சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா….மேடையில் நடிகர் கலையரசன் பரபரப்பு பேச்சு..!
  • Views: - 121

    0

    0