மழைக்காலம் வந்தாலே அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் என்று அவதிப்படுபவரா நீங்கள்… உங்களுக்காகவே இந்த டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
30 செப்டம்பர் 2024, 5:37 மணி
Quick Share

மழைக்காலமானது கடுமையான வெயிலில் இருந்து நம்மை காப்பாற்றினாலும் அதனால் வேறு சில பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்கிறது. திடீரென்று நீரில் ஏற்படும் இந்த மாற்றம் மனிதர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்கச் செய்து அதனால் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. மழைக்காலம் வந்துவிட்டாலே சளி, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் காய்ச்சல் போன்றவை பொதுவான நோய்களாக மாறிவிடுகிறது. ஆனால் இதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு சில வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் துளசி இலைகள். துளசி இலைகளை பயன்படுத்தி உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அதன் மூலமாக மழைக்கால தொற்றுகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

துளசி மற்றும் மஞ்சள் கசாயம்
கசாயம் என்பது இந்தியாவில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பானம். மேலும் இதில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் பண்புகள் இருக்கும். துளசி மற்றும் மஞ்சளாகிய இரண்டையும் பயன்படுத்தி கசாயம் செய்து அதனை பருகிவர உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த இரண்டு பொருட்களிலுமே வீக்க எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அவை தொற்றுகளில் இருந்து உங்களை காப்பாற்றுகின்றன.

துளசி மற்றும் இஞ்சி சட்னி

துளசி இலைகளை வைத்து சட்னி செய்யலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. துளசி, இஞ்சி மற்றும் புளி ஆகியவை சேர்த்து வைத்து அரைக்க கூடிய இந்த சட்னி சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும் அதே நேரத்தில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

துளசி பன்னீர் சாண்ட்விச் உங்களுடைய காலை உணவை துளசி பன்னீர் சாண்ட்விச்சுடன் துவங்கினால் நிச்சயமாக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். இந்த சாண்ட்விச்சை வெறும் 15 நிமிடங்களில் உங்களால் செய்து விட முடியும். வழக்கமாக நீங்கள் செய்யும் சாண்ட்விச்சில் சேர்க்கும் காய்கறிகளோடு பன்னீர் மற்றும் துளசி இலைகளை சேர்த்து செய்ய வேண்டும்.

துளசி மற்றும் கிராம்பு கசாயம்

மழை காலத்தில் அனைவரும் கட்டாயமாக கசாயம் எடுத்துக் கொள்வது நல்லது. கசாயம் குடிப்பதால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்றுகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். துளசி மற்றும் கிராம்பு கசாயத்தில் உள்ள மருத்துவ குணங்கள் சளி மற்றும் இருமலில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இந்த கசாயத்தில் சிறிதளவு பட்டை மற்றும் மஞ்சள் தூள் சேர்ப்பது அதனை இன்னும் ஊட்டச்சத்து மிக்கதாக மாற்றுகிறது.

துளசி மற்றும் இஞ்சி டீ

ஒருவேளை நீங்கள் ஒரு தேநீர் பிரியராக இருந்தால் உங்களுடைய வழக்கமான டீக்கு பதிலாக இந்த மூலிகை தேநீரை குடித்து பாருங்கள். துளசி, இஞ்சி மற்றும் பிற மசாலா பொருட்களான பிரியாணி இலை, மிளகு மற்றும் பிறவற்றை கொண்டு செய்யப்படும் இந்த தேநீர் மழைக்காலத்தில் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு சிறந்ததாக அமைகிறது. துளசி, இஞ்சி தேநீர் வழக்கமான தேநீரைப் போலவே சுவையாகவும் இருக்கும்.

எனவே இந்த மழைக்காலத்திலாவது சளி, இருமல் மற்றும் காய்ச்சல் இல்லாமல் இருப்பதற்கு இந்த 5 குறிப்புகளில் ஒன்றை பயன்படுத்தி உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களை விரட்டுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 73

    0

    0

    மறுமொழி இடவும்