தீயாய் வேலை செய்து உடல் எடையை குறைக்க உதவும் மஞ்சள்…!!!
Author: Hemalatha Ramkumar21 November 2024, 2:49 pm
“தங்க மசாலா” என்று கொண்டாடப்படும் மஞ்சள் அதன் வீக்க எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் போனது. மேலும் இது உடல் எடையை குறைக்கவும் உதவும். மஞ்சளில் உள்ள ஆக்டிவ் காம்பவுண்டான குர்குமின் வீக்கத்தை குறைத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை தூண்டி, கொழுப்பு செல் உருவாக்கம் மற்றும் இன்சுலின் சீரமைப்புக்கு உதவி ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க மஞ்சள் எவ்வாறு உதவுகிறது?
வீக்கத்தை குறைக்கிறது
வீக்கம் என்பது நமது உடலில் உடற்பருமன், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. மஞ்சள் மற்றும் அதில் உள்ள ஆக்டிவ் காம்பௌண்ட் குர்குமின் வீக்க எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதாக ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வீக்கத்தை குறைப்பது குறிப்பாக அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை சரிசெய்து ஆரோக்கியமான உடல் எடையை ஊக்குவிக்கிறது. எனவே தினசரி உணவில் மஞ்சள் சேர்ப்பது உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உடல் எடையை பராமரிப்பதற்கு உதவுகிறது.
குடல் ஆரோக்கியம்
ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகள் உடல் எடையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சமநிலையை கவனித்துக் கொள்ள மஞ்சள் உதவுகிறது. நமது செரிமான பாதையில் உள்ள நல்ல பாக்டீரியா மற்றும் கெட்ட பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிப்பதன் மூலமாக மஞ்சள் உடல் எடையை கட்டுப்படுத்துகிறது. ஆரோக்கியமான குடல் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்து, நாளடைவில் அது உடல் எடை கட்டுப்படுத்துவதில் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வளர்சிதை மாற்றம்
மஞ்சளானது வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. மெட்டபாலிசம் என்பது நமது உடலில் உணவை ஆற்றலாக மாற்றும் ஒரு செயல்முறை. மெட்டபாலிசம் நம்முடைய உடலில் கலோரிகள் எரிக்கப்படுவதை உறுதி செய்கிறது.
கொழுப்பு செல் உருவாக்கம்
மஞ்சள் கொழுப்பு செல்களின் வளர்ச்சியை தடுத்து, உடல் எடையை கட்டுப்படுத்துகிறது. கொழுப்பு செல் உருவாக்கத்தை குறைப்பதற்கு மஞ்சள் உதவும் என்பது சம்பந்தப்பட்ட ஆய்வுகள் குறைவாக இருந்தாலும் உடல் எடையை கட்டுப்படுத்துவதில் மஞ்சள் சிறந்த பலன்களை கொண்டுள்ளது என்பது கூடுதல் கருதுகோளாக அமைகிறது.
இதையும் படிக்கலாமே: ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும் செரிமான கோளாறுகள்… இன்னும் என்னென்ன சொல்வாங்களோ தெரியலையே!!!
இன்சுலின் சீரமைப்பு
சமநிலையான இன்சுலின் அளவுகள் அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தவிர்த்து, அதிக கலோரிகள் உடலில் சேர்க்கப்படுவதை தவிர்க்கிறது. இன்சுலனை சீரமைத்து சீரான பசி மற்றும் வயிறு நிரம்பிய உணர்வை நாள் முழுவதும் அளிக்கிறது. இன்சுலின் விளைவு சீராக இருந்தால் ஆரோக்கியமான பசி மற்றும் வயிறு நிரம்பி உணர்வு இருக்கும். இதனால் நாம் அதிகப்படியான உணவு சாப்பிடுவதை குறைக்கலாம்.
உடல் எடையை குறைப்பதற்கு மஞ்சள் உதவும் என்பதற்கான ஒரு சில பலன்களுக்கு இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு சரிவிகித உணவின் ஒரு பகுதியாக மஞ்சளை பயன்படுத்துவது நிச்சயமாக நல்லதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.