தேங்காயை வைத்து வெயிட் லாஸா… செம ஐடியாவா இருக்கே!!!

Author: Hemalatha Ramkumar
16 November 2024, 4:55 pm

உடல் எடையை குறைப்பதற்கு தேங்காய் உதவும் என்று நிச்சயமாக நீங்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டீர்கள். இது நமக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் சுவையை தருவதோடு மட்டுமல்லாமல் இதில் உடல் எடை குறைப்பு நன்மைகளும் காணப்படுகிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தனித்துவமான கொழுப்பு அமிலங்கள் நிறைந்த தேங்காய் உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த முறையில் செயல்படுகிறது. நம்முடைய உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, அதிக கலோரிகள் எரிக்கப்படுவதை உறுதி செய்கிறது. 

மேலும் இது பசியை அடக்கி நீண்ட நேரத்திற்கு பசி உணர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. எனினும் இதனை அளவோடு சாப்பிட்டால் மட்டுமே இந்த பலன்களை நம்மால் பெற முடியும். இப்போது தேங்காயை சாப்பிடுவதால் உடல் எடை எப்படி குறையும் என்பதை தெரிந்து கொள்வோம். 

தேங்காய் உடல் எடையை குறைக்க உதவும் என்பது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் உடல்பருமனான ஆண்களுக்கு தேங்காய் கொடுக்கப்பட்டது. அவர்களுடைய உடல் எடை சீராக குறைந்தது கண்டறியப்பட்டது. மேலும் ரத்த கொழுப்பு அளவுகள் மேம்படுத்தப்பட்டு, ரத்த சர்க்கரை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தேங்காய் எண்ணெயில் உள்ள மீடியம் செயின் டிரைகிளிசரைடுகள் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இந்த மீடியம் செயின் டிரைகிளிசரைடுகள் நமது உடலில் விரைவாக உறிஞ்சப்பட்டு நேரடியாக கல்லீரலுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அது மெட்டபாலிசம் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்த விரைவான மெட்டபாலிசம் செயல்முறை உடலில் கொழுப்பு அதிகப்படியான உடல் எடையாக சேமிக்கப்படுவதை தடுக்கிறது. மேலும் இது மெட்டபாலிசத்தை ஊக்குவித்து அதிக கலோரிகள் எரிக்கப்படுவதை உறுதி செய்கிறது. இதனால் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். 

மேலும் நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு பசி எடுக்காது. இதனால் நீங்கள் குறைவான கலோரிகளை சாப்பிடுவீர்கள். 

இதையும் படிக்கலாமே: எவ்வளோ பொல்யூஷன் இருந்தாலும் அத சமாளிக்க இந்த யோகாசனங்கள் உங்களுக்கு ஹெல்ப் பண்ணும்!!!

எனினும் இது ஒரு மாயாஜாலம் ஏற்படுத்தும் தீர்வு கிடையாது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். சரிவிகித உணவு, தினமும் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகிய அனைத்தும் இணைந்தே உங்களுக்கான உடல் எடை குறைப்பு முடிவுகளை அளிக்கும். 

தேங்காயில் நல்ல அளவு நார்ச்சத்து இருப்பதால் இது செரிமானத்திற்கு உதவி, ஆரோக்கியமான குடலை பராமரிக்கிறது. குடல் அமைப்பு ஆரோக்கியமாக இருந்தால் உணவு மூலமாக நமக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் சிறந்த முறையில் உறிஞ்சப்பட்டு நம்முடைய உடல் எடை சீராக பராமரிக்கப்படும். 

தேங்காயை உடல் எடை குறைப்பதற்கு பயன்படுத்துவது எப்படி? 

தேங்காய் எண்ணெய்

வழக்கம்போல நீங்கள் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம் அல்லது நீங்கள் காலை பருகும் காபியில் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பருகலாம்.

தேங்காய் பால் 

தேங்காய் பாலை அப்படியே பருகலாம். அப்படி சாப்பிட பிடிக்காதவர்கள் அதை குழம்பு, சூப் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். 

இளநீர் 

இளநீர் பருகுவது உங்களுக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை வழங்குகிறது. மேலும் உங்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. 

தேங்காய் பால் சாதம் 

பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற மசாலா பொருட்களை எண்ணெய் அல்லது நெய்யில் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போனவுடன் உறவைத்த அரிசி, தேவையான அளவு உப்பு மற்றும் இந்த அரிசியை வேக வைக்க தண்ணீருக்கு பதிலாக நீங்கள் தேங்காய் பால் சேர்க்கலாம். இந்த தேங்காய் பால் சாதத்தில் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளையும் சேர்ப்பது இதனை இன்னும் ஆரோக்கியமானதாக மாற்றும். 

தின்பண்டங்கள் 

தேங்காயை வைத்து ஏராளமான தின்பண்டங்கள் செய்து சாப்பிடலாம். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருப்பதோடு நமக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்கி, உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!