ஆரோக்கியம்

வறண்டு போன உதடுகளுக்கான சொல்யூஷன் உங்க வீட்டு கிட்சன்லயே இருக்கு!!!

வறண்ட சருமம் மற்றும் விரிசல் கொண்ட உதடுகளுக்கான சீசன் வந்தாச்சு. எவ்வளவு தான் நீங்கள் உங்களுடைய சருமத்தை துணிகளால் மூடி வைத்தாலும் இந்த கடுமையான குளிர்கால காற்றில் இருந்து உதடுகளை நம்மால் பாதுகாக்க முடியாது. ஆனால் அதற்காக நீங்கள் விலையுயர்ந்த கெமிக்கல் சேர்க்கப்பட்ட லிப்-பாம்களை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களுக்கான இயற்கை தீர்வு சமையல் அறையிலேயே உள்ளது. 

பசு நெய் என்பது நம்முடைய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு அற்புதமான பொருள். ஆனால் நாம் சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலையாக்க இதனை ஒரு ஆர்கானிக் சரும பராமரிப்பு பொருளாக பயன்படுத்தலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. நெய்யில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும், மாய்சரைசிங் பண்புகளும் காணப்படுவதால் இதனை இரவில் நம்முடைய உதடுகளுக்கு தடவிக் கொண்டு படுக்கும்பொழுது அதனால் எக்கச்சக்கமான நன்மைகள் கிடைக்கிறது. 

உதடுகளில் நெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் 

குளிர் காலத்தில் இருந்து உதடுகளை பாதுகாக்கிறது

தினமும் உங்களுடைய உதடுகளுக்கு நெய்யை தடவி வந்தால் அதற்கு தேவையான போஷாக்கு கிடைக்கும். ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குவதன் மூலமாக நெய் உதடுகளில் உள்ள ஈரப்பதத்தை தக்கவைத்து வறட்சியை போக்கி, அதனை மென்மையாக மாற்றுகிறது. 

இதையும் படிக்கலாமே:  பிரக்னன்சி டைம்ல வர டயாபடீஸ் பிரச்சனையை எப்படி சமாளிப்பது…???

உதடுகளை குண்டாக மாற்றுகிறது 

மென்மையான, குண்டான உதடுகளை யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். ஆரோக்கியமான அதே நேரத்தில் குண்டாக காட்சியளிக்கும் உதடுகளை பெறுவதற்கு நீங்கள் நெய்யை பயன்படுத்தலாம். இதற்கு நெய்யுடன் ஒரு சில துளிகள் புதினா எண்ணெய் கலந்து உதடுகளில் தடவ வேண்டும். புதினா எண்ணெய் உதடுகளை உண்டாக மாற்றும். அதே நேரத்தில் நெய் உதடுகளில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து அதற்கு தேவையான போஷாக்கை வழங்கி அதனை பாதுகாக்கும். 

சேதமான செல்களை சரி செய்கிறது 

உதடுகளுக்கு நெய்யை பயன்படுத்தும் பொழுது உதடுகளில் உள்ள ரத்த ஓட்டம் அதிகரித்து அங்கு சேதமடைந்த செல்கள் சரி செய்யப்படுகின்றன. வழக்கமான முறையில் சுத்தமான நெய்யை நீங்கள் பயன்படுத்தி வந்தால் உதடுகளில் உள்ள பிக்மென்டேஷன் குறைந்து, கருமையான சருமம் மாறி உங்களுக்கு சிவப்பான உதடுகள் கிடைக்கும். 

விரிசல் கொண்ட உதடுகளை ஆற்றுகிறது

வறண்ட, விரிசல் கொண்ட உதடுகளுக்கு நெய் ஒரு சிறந்த கேம் செயின்ஜராக அமைகிறது. ஒரு சிறிய அளவிலான நெய்யை நீங்கள் தொடர்ந்து தடவி வந்தால் கூட உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு ஈரப்பதம் கிடைத்து, சருமத்தில் உள்ள விரிசல்கள் கூடிய விரைவில் மறையும். எனவே வலியை ஏற்படுத்தும் விரிசல் கொண்ட உதட்டில் உள்ள தோல் உரிதல் மற்றும் ரத்த கசிவு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு உங்களுடைய உதடுகளுக்கு நெய்யை தினமும் தடவுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

டிவியில் அதிக ஒலி எழுப்பியதால் விபரீதம்.. கோவை சுந்தராபுரத்தில் இளைஞர் படுகொலை!

கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை கடை…

14 minutes ago

கொண்டையை மறைந்த இரானி கொள்ளையர்கள்.. விமானத்துக்குள்ளே சென்று கைது.. செயின் பறிப்பு அரெஸ்ட் பின்னணி!

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.…

46 minutes ago

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இருந்து நயன்தாரா விலகல்? பதறிய குஷ்பு!

மூக்குத்தி அம்மன் முதல் பாகம் 2020ல் வெளியானது. நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி நடிப்பில் வெளியான இந்த படத்தை ஆர்ஜே…

1 hour ago

இன்னும் எதுக்கு கண்ணாமூச்சி? இபிஎஸ் – அமித்ஷா சந்திப்பு.. அண்ணாமலை சஸ்பென்ஸ் பேச்சு!

நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியது தமிழக அரசியல்…

1 hour ago

ரஜினிக்கு டூப் போட்டு நடித்த மனோஜ் : எந்த படத்துக்கு தெரியுமா?

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…

2 hours ago

This website uses cookies.