பூசணி விதை எண்ணெய் எண்ணெய் இருக்க பயம் ஏன்… சொட்டையே விழுந்தாலும் கவலையில்ல!!!

Author: Hemalatha Ramkumar
11 January 2025, 12:11 pm

தலைமுடி மெலிந்து போதல் அல்லது தலைமுடி மெதுவான வளர்ச்சிக்கு ஏதேனும் இயற்கையான தீர்வுகள் இருக்குமா என்று நீங்கள் தேடிக்கொண்டே இருக்கிறீர்களா? தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக மார்க்கெட்டில் எண்ணில் அடங்காத ப்ராடக்டுகள் விற்பனை செய்யப்பட்டாலும் நமக்கான சரியான ஒன்றை தேர்வு செய்வது மிகவும் அவசியம். அவற்றில் பூசணி விதை எண்ணெய் தலைமுடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு உதவுவதாக சமீபத்தில் பிரபலமாகி வருகிறது. ஆனால் உண்மையில் இது உங்களுடைய தலைமுடியின் ஆரோக்கியத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? இதனை இந்த பதிவின் மூலமாக தெளிவு படுத்திக் கொள்ளலாம்.

பூசணி விதை எண்ணெயை சிறப்பானதாக மாற்றுவது எது?

பூசணி விதை எண்ணெய் என்பது பல்வேறு ஆரோக்கிய நலன்கள் நிறைந்த பூசணி விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆய்வின்படி, இந்த எண்ணெயில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. இவை அனைத்துமே நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் தலைமுடிக்கு அவசியமானவை. இதில் உள்ள சிங்க், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் E போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான தலைமுடி மற்றும் மயிர்கால்களை பராமரிப்பதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்.

தலைமுடி வளர்ச்சி அதிகரிப்பதற்கு பூசணி விதை எண்ணெய் தரும் நன்மைகள்

தலைமுடி உதிர்வோடு தொடர்புடைய டைஹைட்ரோடெஸ்டோஸ்ட்டிரோன் (DHT) என்ற ஹார்மோன் உற்பத்தியை பூசணி விதை எண்ணெய் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களில் அதிக அளவு DHT இருப்பது மயிர் கால்களை சுருக்கி, தலைமுடி வளர்ச்சி சுழற்சியை குறுக்கி, சொட்டையை ஏற்படுத்துகிறது. எனவே பூசணி விதை எண்ணெயை பயன்படுத்துவது ஹார்மோன் காரணமாக ஏற்படும் தலைமுடி மெலிந்து போகும் பிரச்சனையை தடுப்பதற்கு உதவுகிறது.

பூசணி விதை எண்ணெயில் உள்ள அதிக அளவு அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 உள்பட நம்முடைய மயிர் கால்களுக்கு போஷாக்கையும், வலிமையும் சேர்க்கிறது. இயற்கையான புரோட்டின், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் இயற்கையான மூலமாக அமையும் பூசணி விதை எண்ணெய் தலைமுடியை பாதுகாத்து மயிர் கால்களுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

பூசணி விதை எண்ணெய் ஒரு இயற்கை கண்டிஷனாராக செயல்பட்டு தலைமுடியில் ஈரப்பதத்தை தக்கவைத்து, அது வறண்டு போவதையும், எளிதில் உடைவதையும் தடுக்கிறது. இதனால் தலைமுடி உடைவது மற்றும் ஸ்பிலிட் எண்ட் பிரச்சனை குறைகிறது. மேலும் ஆரோக்கியமான மற்றும் வலிமையான தலைமுடி கிடைக்கும். வழக்கமான முறையில் இந்த எண்ணெயை பயன்படுத்தி வர தலைமுடி பளபளப்பாக மாறி மென்மையாகும்.

இதையும் படிக்கலாமே: இதெல்லாம் இவ்வளவு நாள் ஹெல்த்தின்னு நெனச்சுக்கிட்டு இருந்தீங்களா… நல்லா ஏமாந்தீங்களா…!!!

பூசணி விதை எண்ணெயில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் மயிர் கால்களுக்கு தேவையான போஷாக்கை வழங்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் இது வீக்கத்தை குறைப்பதால் மயிர்கல்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. பூசணி விதை எண்ணெயை மயிர்க்கால்கள் மற்றும் தலைமுடியில் மசாஜ் செய்வதால் அதன் பலன்களை பெறலாம்.

ஆரோக்கியமான மயிர்கால்கள் என்பது ஆரோக்கியமான தலைமுடிக்கு மிகவும் அவசியம். இதில் பூசணி விதை எண்ணெய் முக்கிய பங்கு கொண்டுள்ளது. இந்த எண்ணெயில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் எரிச்சல் கொண்ட மயிர் கால்களை ஆற்றி, பொடுகு பிரச்சனையை குறைக்கிறது. மேலும் சீபம் உற்பத்தியை சமநிலையாக்கி தலைமுடி வளர்வதற்கு ஒரு சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாகிறது. அளவுக்கு அதிகமான எண்ணெய் மற்றும் வறட்சியை இந்த எண்ணெய் போக்குகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!