உங்க சருமம் எப்போதும் இளமையாவே இருக்க நைட்டைம் ஸ்கின்கேர்ல இதையும் சேர்த்துக்கோங்க!!!
Author: Hemalatha Ramkumar20 November 2024, 6:27 pm
உப்பை சமையலுக்கு பயன்படுத்துவது பற்றி நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் உப்பு சமையல் தேவைகளையும் தாண்டி சமையலறைக்கு வெளியே பல ஆச்சரியமூட்டும் பயன்பாடுகளை கொண்டுள்ளது. ஆமாம், உப்பை உங்களுடைய இரவு நேர சரும பராமரிப்பு வழக்கத்தில் பயன்படுத்தலாம்.
உப்பு தண்ணீரில் உங்களுடைய முகத்தை கழுவுவது எப்படி?
உங்கள் சருமத்தை இளமையாக வைப்பதற்கு உப்பு தண்ணீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இதற்கு 1/2 கிளாஸ் தண்ணீரில் 2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கவும். கடல் உப்பாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். சுத்தமான முகத்தில் மேக்கப் அனைத்தையும் அகற்றிவிட்டு, இந்த தண்ணீரை கொண்டு முகத்தை கழுவவும். இப்போது உங்களுடைய சருமத்தில் உப்பு துகள்கள் இருக்கலாம். அதனை ஒரு துண்டு அல்லது டிஷ்யூ வைத்து துடைத்து விடவும். சுத்தமாக துடைத்த பிறகு நீங்கள் தூங்க செல்லலாம். முதல் நாள் இதனை நீங்கள் பயன்படுத்தியவுடன் முகத்தில் ஒருவித அசௌகரியம் ஏற்படலாம். ஆனால் இரண்டாவது நாள் அந்த உணர்வு உங்களுக்கு இருக்காது. காலையில் நீங்கள் எழுந்தவுடன் உங்கள் முகம் புத்துணர்ச்சியோடு இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். சரும துளைகள் இறுக்கமாகி உங்கள் முகத்திற்கு புதுப்பொலிவு கிடைக்கும்.
முகத்திற்கு உப்பு தண்ணீர் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
உப்பு தண்ணீர் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சரும துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை வெளியேற்றுகிறது. இதனால் உங்களுக்கு மென்மையான சருமம் கிடைக்கும் மற்றும் முகப்பருக்கள் குறையும்.
உப்பில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பாக்டீரியா காரணமாக ஏற்படும் முகப்பரு வளர்ச்சி தடுக்கப்படும்.
ஒரு சில வகையான உப்புகளில் மெக்னீசியம் போன்ற மினரல்கள் காணப்படும். இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து எரிச்சல் கொண்ட சருமத்தை ஆற்றும்.
இதையும் படிக்கலாமே: ஓட்ஸின் மகிமை: வெயிட் லாஸ், வெய்ட் கெயின் இரண்டுக்கும் ஒரே சொல்யூஷன்!!!
அபாயங்கள் மற்றும் கருதுகோள்கள்
உப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அது சருமத்தை வறண்டு போக செய்யலாம். மேலும் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் அகற்றப்பட்டு அது சருமத்தில் எரிச்சல், எக்ஸிமா அல்லது ரோசேசியா போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உப்பை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவது சருமத்தின் இயற்கையான பாதுகாப்பு தடையை அகற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.
உப்பு என்பது நமக்கு தற்காலிக பலன்களை மட்டுமே தரும். எனவே எந்த ஒரு மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட சரும சிகிச்சைக்கு பதிலாக இதனை பயன்படுத்தக் கூடாது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.