தினமும் நடைபயிற்சிக்கு செல்வது, வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவது மற்றும் சர்க்கரை சாப்பிடுவதை குறைப்பது போன்ற நாம் பின்பற்றக்கூடிய ஒரு சில வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் நம்முடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதிரி நாம் செய்யக்கூடிய சிறு சிறு மாற்றங்கள் நம்முடைய ஆரோக்கியத்தில் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கும். ஒருவருடைய ஃபிட்னஸ் அளவு என்னவாக இருந்தாலும் நடைபயிற்சி என்பது ஒருவர் எளிதாக செய்யக்கூடிய உடற்பயிற்சி ஆயினும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நம்ப முடியாத பலன்களை தருகிறது. இதனோடு சேர்த்து வீட்டில் சமைக்கப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடுவதன் மூலமாக நம்முடைய உடலுக்கு ஆரோக்கியமான மற்றும் சரிவிகித உணவை கொடுக்க முடியும். அதே நேரத்தில் அதிக அளவு சர்க்கரை சாப்பிடுவதை குறைப்பது நாள்பட்ட பிரச்சனைகளான டயாபடீஸ், உடற்பருமன் மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும். ஆகவே தினமும் நடைபயிற்சிக்கு செல்வது, வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவது மற்றும் சர்க்கரையை குறைப்பது போன்றவற்றை தினமும் செய்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஃபிட்னஸ்
நடைப்பயிற்சி என்பது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தை வலுப்படுத்தி, ஸ்டாமினா அளவை அதிகரிக்கும் ஒரு குறைந்த தாக்கம் கொண்ட கார்டியோ பயிற்சி. தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு நடைபயிற்சி செல்வது உடலில் உள்ள கலோரிகளை எரித்து, உடல் எடையை சீராக பராமரிக்கும். அதே சமயத்தில் நமக்கு வகை 2 நீரிழிவு நோய், உடற்பருமன் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
மன நலன்
தினமும் நடைப்பயிற்சிக்கு செல்லும்பொழுது நம்முடைய யோசனைகள் தெளிவாகும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். மேலும் நடைபபயிற்சிக்கு செல்லும் பொழுது இயற்கையோடு நாம் பயணிப்பதற்கான நேரம் கிடைப்பதால் மனதிற்கு ஒருவித அமைதி கிடைத்து இயற்கையுடனான பந்தம் நெருக்கமாகிறது.
சிறந்த செரிமானம்
வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவது நம்முடைய செரிமானத்திற்கு பெரிய அளவில் உதவி புரியும். ஃபிரஷான முழு மூலப்பொருட்கள் கொண்டு சமைக்கப்பட்ட உணவுகளில் அதிக நார்ச்சத்து இருக்கும். இது ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெறுவதற்கு உதவும். அதே நேரத்தில் குறைவான சர்க்கரை சாப்பிடுவது வயிற்றில் அதிகப்படியான வீக்கம் ஏற்படுவதை தடுத்து நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்கும்.
இதையும் படிக்கலாமே: இந்த மாதிரி பூண்டு சட்னி செய்து கொடுத்தா தினமும் கூட இட்லி, தோசை சாப்பிடலாம்!!!
உடல் எடை கட்டுப்பாடு
நடைபயிற்சிக்கு செல்வது மெட்டபாலிசத்தை அதிகரித்து, கலோரிகளை எரித்து கொழுப்பு இழக்கப்படுவதை ஊக்குவிக்கிறது. இதனோடு சேர்ந்து சரிவிகித உணவை சாப்பிடும் பொழுது உடல் எடையில் நீண்ட கால பலன்களை எதிர்பார்க்கலாம். சர்க்கரை இல்லாத உணவு நம்முடைய ஆயுளை அதிகரித்து, கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். மேலும் வீக்கத்தை குறைத்து ஆரோக்கியமான உடல் எடையை பெறுவதற்கு உதவும்.
தரமான தூக்கம்
நடைபயிற்சி நம்முடைய உடலின் சர்க்காடியன் ரிதத்தை சீரமைத்து, விரைவாக தூங்குவதற்கும், தரமான தூக்கம் பெறுவதற்கும் உதவுகிறது. அதே நேரத்தில் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவை சாப்பிட சர்க்கரை அளவுகள் சீராக பராமரிக்கப்படும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
This website uses cookies.