இரண்டே செகண்ட்ல உங்க எனர்ஜிய கன்னா பின்னான்னு அதிகமாக்க இந்த ஹேக் டிரை பண்ணுங்க!!!
Author: Hemalatha Ramkumar16 October 2024, 6:09 pm
ஒருவேளை உங்களுக்கு படபடப்பாக இருந்தால் மூக்கை கிள்ளுங்கள், உடனடியாக அமைதியாகி விடுவீர்கள். பதட்டமாக இருந்தால் உங்களுடைய கையை நெஞ்சில் வைத்து, பொறுமையாக மூச்சை ஆழமாக உள்ளெடுங்கள். உங்கள் உடலுக்கு உதவும் இந்த மாதிரியான டிரிக்குகளை ஏற்கனவே நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு உதவக்கூடிய இன்னும் ஏராளமான டிரிக்குகள் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சோர்வாக இருக்கும் போது உங்களுடைய ஆற்றலை உடனடியாக அதிகரிப்பதற்கு குளிர்ந்த தண்ணீரை முகத்தில் தெளிக்கவும் அல்லது கைகளை நன்றாக வீசி நடை பயிற்சி மேற்கொள்ளவும்.
உங்களுக்கு மூக்கடைப்பு இருக்கும்போது வாயின் மேற்பகுதியில் ஒரு ஐஸ் கட்டியை வைக்கவும்.
இரவில் தூக்கம் வரவில்லையா? ஒரு நிமிடத்திற்கு உங்களுடைய கண்களை வேகமாக சிமிட்டிக்கொண்டே இருங்கள்.
இந்த ட்ரிக்குகள் உங்களுக்கு தற்காலிக நிவாரணம் அல்லது தீர்வை வழங்கலாம். ஆனால் இந்த ஹேக்குகளுக்கு பின்னணியில் ஏதேனும் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் உள்ளனவா என்ற கேள்வி எழலாம். உண்மையில் படபடப்பு, பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றுக்கு பின்னணியில் உள்ள காரணத்தை கண்டுபிடிப்பது அதற்கான தீர்வை பெற்று தருவதற்கு மிகவும் அவசியம். அடிப்படை காரணத்தை கண்டுபிடித்தால் மட்டுமே உங்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.
இதையும் வாசிக்கலாமே: நாள் முழுவதும் ACலயே இருப்பீங்களா… அப்படின்னா நீங்க இத செய்யாவிட்டா பெரிய ஆபத்துல மாட்டிக்க சான்ஸ் இருக்கு!!!
மாறாக மூக்கை கிள்ளுவது, நெஞ்சில் கைகளை வைத்து, ஆழமாக சுவாசிப்பது மற்றும் கண்களை வேகமாக சிமிட்டுவது போன்றவை சிறந்த முறையில் செயல்பட்டாலும் அவை உங்களுக்கு குறுகிய கால பலன்களை மட்டுமே அளிக்கும். அதே போல உங்களுடைய ஆற்றலை அதிகரிப்பதற்கு ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்துவது நல்ல தூக்கம் பெறுவது மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்தல் போன்றவை முகத்தில் குளிர்ந்த நீரை தெளிப்பது அல்லது கைகளை வீசி நடப்பதை விட சிறந்த பலன்களை உங்களுக்கு தரும்.
உணவு, மன அழுத்தம் மற்றும் தூக்கம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளன. மன அழுத்தம் உங்களுடைய உடல் மற்றும் மன நலனை மிக மோசமாக பாதிக்கலாம். இதனால் ஆரோக்கியமற்ற உணவு சாப்பிடும் பழக்கங்கள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தம் தூக்கத்திலும் தலையிடுகிறது. எனவே நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறுவதற்கு போதுமான அளவு தண்ணீர் குடித்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல், மூச்சுப் பயிற்சிகளை பின்பற்றுதல் போன்ற நுட்பங்கள் உதவும். இவற்றை செய்தாலே உங்களுடைய ஆற்றல் அதிகமாகும், மூளை செயல்பாடுகள் சிறந்த முறையில் நடைபெறும், மன அழுத்தம் குறையும் மற்றும் தூக்கத்தின் தரம் மேம்படும்.