பெண் குழந்தைகள் விரைவாக பூப்படைய ஸ்மார்ட்போன் காரணமா… திடுக்கிட வைக்கும் ஆய்வு தகவல்!!!

Author: Hemalatha Ramkumar
21 November 2024, 3:03 pm

இன்றைய மாடர்ன் உலகில் குழந்தைகளை ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் மற்றும் டேப்லெட் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களிடமிருந்து தள்ளி வைப்பது சாத்தியமற்ற ஒன்றாக இருக்கிறது. 2 வயது மற்றும் மேற்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 மணி நேரத்திற்கு மேல் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஒருவேளை இதனை பின்பற்றாவிட்டால் அது குழந்தைகளின் மனவளர்ச்சி, மொழி பிரச்சனைகள், மூளை வளர்ச்சி மற்றும்  விரைவான பூப்படைதலை கூட ஏற்படுத்தலாம். எனவே இந்த பதிவில் அளவுக்கு அதிகமாக எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தும் பெண் குழந்தைகள் எப்படி விரைவாக பூப்படைகின்றனர் என்பது சம்பந்தமான விஷயங்களை பற்றி பார்க்கலாம். 

2022 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் இருந்து வெளியாகும் நீல ஒலிக்கு வெளிப்படுத்தப்படுவதால் ஒருவரின் ஹார்மோன் அளவுகள் பாதிக்கப்படுகிறது. இது பெண் குழந்தைகளில் வழக்கத்தை விட விரைவாக பூப்படைய செய்கிறது. இது சம்பந்தமான ஆய்வு எலிகள் மீது நடத்தப்பட்டது. அளவுக்கு அதிகமான ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் விரைவான பூப்படைதல் ஆகிய இரண்டுக்கும் இடையே தொடர்பு இருப்பது இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகளில் உள்ள கன்டென்ட்கள் குழந்தைகள் மற்றும் டீனேஜர்களை நீண்ட நேரத்திற்கு அவற்றை பயன்படுத்த செய்து, பெற்றோர்களின் கண்டிப்பு இல்லாத காரணத்தால் இது கிட்டத்தட்ட அவர்களுக்கு ஒரு அடிக்ஷனாக மாறி அவர்கள் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். இந்த சங்கிலியை உடைப்பது என்பது மிகவும் கடினம். அவர்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு நாம் பல விஷயங்களை செய்ய வேண்டும். 

இதையும் படிக்கலாமே: தீயாய் வேலை செய்து உடல் எடையை குறைக்க உதவும் மஞ்சள்…!!!

நேரடியாக இணைக்கப்படாவிட்டாலும் ஒரு குழந்தை நீண்ட நேரத்திற்கு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது குழந்தையின் மனநிலை மற்றும் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆட்டிசம் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகப்படியான ஸ்கிரீன் நேரம் காரணமாக குழந்தைகள் ஆரோக்கியமான உணவை சாப்பிட மாட்டார்கள். இரவு தாமதமாக சாப்பிடுவது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது போன்றவை ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும். மேலும் அவர்களுடைய தூக்கத்தின் தரமும் பாதிக்கப்படுகிறது. இது முன்கூட்டிய பூப்படையும் செயல்முறையை தூண்டுகிறது. 

நீல நிற ஒளியானது நமது உடலில் தூக்கத்தை கட்டுப்படுத்த உதவும் மெலடோனின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கிறது. இதனால் விரைவாக தூங்குவது மற்றும் தரமான தூக்கத்தை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சிறுவயதிலேயே பூப்படையும் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல்நிலை மாற்றங்கள் ஒரு புறம் இருந்தாலும், அதனால் அவர்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகள், மனரீதியான அழுத்தம் போன்றவை அவர்களுக்கு வகை 2 நீரிழிவு நோய், உடற்பருமன் மற்றும் ஹைப்பர் டென்ஷன் போன்ற நோய்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. 

எனவே உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அது ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, நிச்சயமாக அவர்களுடைய ஸ்கிரீன் நேரத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.  இல்லாவிட்டால் அதனால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். முழுமையாக ஸ்மார்ட்போனை அவர்களிடமிருந்து பறிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தாலும் அதற்கான நேர கட்டுப்பாட்டை அமைப்பது மிகவும் அவசியம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 144

    0

    0