இஞ்சி சர்பத் குடிச்சா வாந்தி மற்றும் குமட்டல் சரியாகுமா???
Author: Hemalatha Ramkumar7 January 2023, 10:26 am
தற்போது பலர் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதால் அடிக்கடி அஜீரணத்தை அனுபவிக்கின்றனர். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வீக்கம், வாயு மற்றும் வயிற்று வலி ஆகியவை ஏற்படுகிறது. வயிற்றுக் கோளாறு காரணமாக ஒருவர் குமட்டல், அல்லது வாந்தி போன்றவற்றை அனுபவிக்கலாம்.
இஞ்சி என்பது அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த ஒரு மூலிகையாகும். இது சளி, காய்ச்சல் மற்றும் பிற சுவாச அமைப்பு தொடர்பான நிலைமைகளுக்கு இயற்கையாகவே சிகிச்சையளிக்க உதவுகிறது. ஆனால் ஆயுர்வேதத்தில், குமட்டல் மற்றும் வாந்தி, அல்லது கர்ப்ப காலத்தில் காலை சுகவீனம் போன்ற வயிற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க இது பெரும்பாலும் நம்பப்படுகிறது. இது பெரும்பாலும் பக்க விளைவுகள் இல்லாத ஒரு பயனுள்ள மற்றும் பாதுகாப்பான தீர்வாகக் காணப்படுகிறது.
இஞ்சியில் சக்திவாய்ந்த தாவர கலவைகள் உள்ளன. இஞ்சி செரிமானத்தை விரைவுபடுத்துகின்றன. இது உணவு செரிமானம் மற்றும் உடலால் உறிஞ்சப்படும் நேரத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுவதைக் குறைக்கிறது.
குமட்டல் மற்றும் வாந்திக்கு இஞ்சி சர்பத் பயனுள்ளதா?
வயிற்றுப் பிரச்சினைகளுக்கு இஞ்சி ஒரு சிறந்த சிகிச்சையாக இருந்தாலும், இஞ்சி சர்பத் அதே விளைவைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இஞ்சி சர்பத்தில் மூலிகையின் சாறு சிறிய அளவுகளிலேயே உள்ளது. ஆனால் அதற்கு மாற்றாக அதிக சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. இது வயிற்று வலியை மோசமாக்கும்.
எனவே, வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெற இதை நம்புவது பரிந்துரைக்கப்படவில்லை.