குழந்தைகளுக்கு சியா விதைகளை கொடுக்கலாமா???

Author: Hemalatha Ramkumar
9 September 2024, 10:03 am

பெரியவர்களுக்கு சியா விதைகள் ஆரோக்கியமான சூப்பர் ஃபுட்டாக கருதப்படுகிறது. எனினும் குழந்தைகளுக்கு சியா விதைகளை கொடுக்கலாமா வேண்டாமா என்ற கேள்வி பல பெற்றோர்களுக்கு இருக்கலாம். சியா விதைகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா? எத்தனை சியா விதைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்? சியா விதைகளை தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? இது போன்ற பல்வேறு விதமான கேள்விகள் சியா விதைகள் பற்றி இருக்கலாம். உண்மையில், உங்கள் குழந்தைகளுக்கு எந்த ஒரு பயமும் இல்லாமல் நீங்கள் தாராளமாக சியா விதைகளை கொடுக்கலாம். அதிக ஊட்டச்சத்து நிறைந்த இந்த சியா விதைகள் சரிவிகித உணவில் உள்ள இடைவெளிகளை குறைப்பதற்கு அற்புதமான ஒன்றாக கருதப்படுகிறது. அளவில் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக நார்சத்து உள்ளது. இதனால் இது மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. 

சியா விதைகளை சாப்பிடும் பொழுது போதுமான அளவு நீர்ச்சத்து எடுத்துக் கொள்வது குழந்தைகளுக்கு அவசியம். இப்போது சியா விதைகளை குழந்தைகளின் உணவில் எப்படி சேர்ப்பது என்று தெரிந்து கொள்ளலாம். 

குழந்தைகளுக்கு சியா விதைகள் பாதுகாப்பானதா? 

ஆம், சியா விதைகளை குழந்தைகள் பாதுகாப்பாக சாப்பிடலாம். குழந்தைகளின் ஆரம்ப கட்ட வாழ்க்கையில் ஏற்படும் அதிவேக வளர்ச்சிக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் சியா விதைகளில் நிறைந்துள்ளது. சியா விதைகள் ஊட்டச்சத்து இடைவெளிகளை சரி செய்வதற்கு பெரிதும் உதவுகிறது. குறிப்பிட்ட சில உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து சாப்பிடும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சியா விதைகளை பயன்படுத்தலாம். எந்த ஒரு சிக்கல் அல்லது பயம் இல்லாமல் குழந்தைகள் சியா விதைகளை சாப்பிடலாம். சியா விதைகள் பார்ப்பதற்கு அளவில் சிறியதாக இருந்தாலும் இது ஊட்டச்சத்தின் களஞ்சியமாக இருக்கிறது. 

இந்த ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சியா விதைகளை கொடுக்க நினைத்தால் ஆரம்பத்தில் அவர்களுக்கு சிறிய அளவுகளில் கொடுக்கவும். அதனோடு சேர்த்து போதுமான அளவு திரவங்களை நீங்கள் வழங்க வேண்டும் இல்லையெனில் அது மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தலாம். எனினும் உங்கள் குழந்தைகளின் உணவில் சியா விதைகளை சேர்ப்பதற்கு முன்பு குழந்தை நல மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. 

குழந்தைகளுக்கு சியா விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? 

மூளை வளர்ச்சி 

சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மேம்படுத்துகிறது. மேலும் சியா விதைகளில் காணப்படும் ஆல்ஃபா லீனோலினிக் அமிலமும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. 

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம்

குழந்தைகளுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவது வழக்கம். சியா விதைகள் இதற்கு உதவும். 28 கிராம் சியா விதைகளில் 9.75 கிராம் நார்ச்சத்து உள்ளது. செரிமான ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து பெரிதும் அவசியம். 

வலிமையான எலும்புகளுக்கு 

சியா விதைகள் கால்சியம் சத்தின் இயற்கையான மூலமாக அமைவதால் இது குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. பாலை விட ஐந்து மடங்கு அதிக கால்சியம் சத்து சியா விதைகளில் உள்ளது. 

நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்துகிறது 

குழந்தைகள் பள்ளிக்கு சென்று பல்வேறு விதமான நபர்கள் மற்றும் பிற குழந்தைகளை சந்திப்பதால் அவர்களுக்கு அடிக்கடி தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. எனவே அவர்களுக்கு வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு தேவை. இதனை எதிர்கொள்வதற்கு நீங்கள் அவர்களுக்கு சியா விதைகளை கொடுக்கலாம். ஏனெனில் சியா விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சியா விதைகளில் உள்ள மைக்ரோ கெமிக்கல்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் சி போன்றவை இதற்கு காரணமாக அமைகிறது. 

அதிக ஆற்றல் அளவுகள் 

சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் புரோட்டின் நிறைந்துள்ளதால் அது உங்கள் குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. சியா விதைகளை நீங்கள் காலை உணவில் சேர்த்து கொடுக்கும் பொழுது அவர்கள் நாள் முழுவதும் ஆக்டிவாக இருப்பார்கள். சியா விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால் இது இதய ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விக்கும் பங்களிக்கும்.

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 236

    0

    0