இந்த மாதிரி பீரியட்ஸ் இருந்தா பிரக்னன்ட் ஆவதற்கான சான்ஸ் ரொம்ப கம்மி!!!

Author: Hemalatha Ramkumar
15 October 2024, 3:45 pm

கருத்தரிக்க முயற்சித்து வரும் பெண்களுக்கு ஒரு சீரான மாதவிடாய் சுழற்சியை பெற்றிருப்பது நல்ல இனப்பெருக்க ஆரோக்கியத்தை குறிக்கிறது. சீரான மாதவிடாய் இருப்பது மிகவும் அவசியம் என்றாலும் அதே நேரத்தில் மாதவிடாயின் போது உங்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கின் அளவும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. வழக்கத்தை விட உங்களுக்கு குறைவான மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்படும் என்றால் அது உங்களுடைய இனப்பெருக்க தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது. 

அதாவது குறைவான மாதவிடாய் இரத்தப்போக்கு என்பது கருப்பையில் மெல்லிய சுவர்கள் இருப்பதை குறிக்கிறது. இந்த சுவர்கள் எண்டோமெட்ரியம் என்று அழைக்கப்படுகிறது. எண்டோமெட்ரியம் என்பது விந்தணுவோடு இணைந்த கருமுட்டை கர்ப்பப்பையில் பதிவதற்கு ஒரு சிறந்த சூழலை ஏற்படுத்தி கொடுக்கிறது. ஆகவே இது கர்ப்பத்திற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

கருமுட்டை வெளிவரும் ஓவுலேஷன் சமயத்தில் ஒவ்வொரு மாதமும் அண்டகத்திலிருந்து ஒரு கருமுட்டை வெளியிடப்படுகிறது. எனினும் இந்த எண்டோமெட்ரியம் மெல்லியதாக இருந்தால் அது கருப்பதிதல் செயல்முறையில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

குறைவான மாதவிடாய் இரத்தப்போக்கு என்பது ஹார்மோனில் உள்ள சமநிலையின்மை காரணமாக ஏற்படலாம். அதிலும் குறிப்பாக குறைவான ஈஸ்ட்ரோஜன் அளவுகள் இருந்தால் குறைவான மாதவிடாய் இரத்தப்போக்கு இருக்க வாய்ப்புள்ளது. 

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டு அஞ்சறைப் பெட்டியில இந்த ஒரு பொருள் இருக்கிற வரைக்கும் ஆஸ்துமா நினைச்சு கவலையே பட வேண்டாம்!!!

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் என்பது கருப்பையில் உள்ள சுவரை அமைப்பதற்கு உதவுகிறது. இந்த ஹார்மோன் போதுமான அளவு இல்லாவிட்டால் ஓவுலேஷன் செயல்முறை சரியாக நடைபெறாது அல்லது முற்றிலுமாக நடைபெறாமல் போகலாம். மேலும் ஹார்மோன் சமநிலையாக இல்லாவிட்டால் அது இன்விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (IVF) சிகிச்சைக்கான வெற்றி விகிதத்தையும் பாதிக்கலாம். ஏனெனில் மெல்லிய சுவர்கள் என்பது கரு பதிதலில் தலையிடுகிறது. 

அதே நேரத்தில் உங்களுக்கு அதிகப்படியாக மாதவிடாய் இரத்தப்போக்கு இருக்கிறது என்றால் உங்களுக்கு ஆரோக்கியமான ஓவுலேஷன் நடைபெறும் என்பது அர்த்தம் கிடையாது. அதிகப்படியான ரத்தப்போக்கு என்பது ஃபைப்ராய்டுகள் அல்லது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படலாம். PCOS, டயாபடீஸ், தைராய்டு கோளாறுகள் மற்றும் உடற்பருமன் ஆகியவை மாதவிடாய் சுழற்சியை பாதித்து ஒரு பெண் கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. பல பெண்கள் தங்களுடைய வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் PCOS அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். இது மாதிரியான அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெறுவது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். தொடர்ச்சியாக உங்களுக்கு குறைவான மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்படுகிறது என்றால் உடனடியாக மகப்பேறு நிபுணரை அணுகுவது அவசியம். மருத்துவர் உங்களுடைய ஹார்மோன் அளவுகளை சரிபார்ப்பதற்கான இரத்த சோதனைகள் மற்றும் நீர்கட்டிகள் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு அல்ட்ரா சவுண்ட் போன்றவற்றை பரிந்துரை செய்யலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 180

    0

    0