PCOS என்பது கருமுட்டை வெளிவரும் செயல்முறையை பாதித்து, மாதவிடாய் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி, ஒருவருடைய இனப்பெருக்கத்தை பாதிக்கும் சிறு சிறு கட்டிகளின் உருவாக்கம் ஆகும். PCOS கொண்ட பெண்கள் பெரும்பாலும் இன்சுலின் எதிர்ப்பு திறனை அனுபவிக்கின்றனர். அதாவது அவர்களுடைய உடலால் ரத்த சர்க்கரையை சீராக்கும் இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்ய முடியுமே தவிர அதனை திறம்பட பயன்படுத்த முடியாது. இதன் காரணமாக PCOS மற்றும் டயாபடீஸ் இடையே முக்கியமான ஒரு தொடர்பு இருப்பது ஒரு அச்சுறுத்தலாக மாறி உள்ளது.
இன்சுலின் எதிர்ப்பு திறன் என்பது குறிப்பாக மரபணு சார்ந்த காரணிகள், உடற்பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படுகிறது. இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாக நமது உடலானது சரியான ரத்த அளவை பராமரிக்க முயற்சி செய்கிறது. எனினும் அதிகப்படியான இன்சுலின் அண்டகத்தை பாதித்து, இதனால் பாலிசிஸ்டிக் நிலை உருவாகிறது. அதிக இன்சுலின் அளவு காரணமாக அண்டகங்கள் பெண்களில் அதிகப்படியான ஆண் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கிறது. இதன் விளைவாக சீரற்ற மாதவிடாய், முகப்பரு, உடல் மற்றும் முகத்தில் அதிக முடி வளர்ச்சி மற்றும் ஒரு சில சமயங்களில் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
இன்சுலின் எதிர்ப்பு திறனை ஏற்படுத்தும் காரணிகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் ரத்த சர்க்கரையை சீராக்கும் நமது உடலின் திறன் பாதிக்கப்பட்டு இதன் விளைவாக டயாபடீஸ் ஏற்படலாம். PCOD என்பது ஃப்ரீ டயாபட்டிக் நிலையாக பார்க்கப்படுகிறது. எனவே இதனை சரியான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாக கவனிக்காமல் விட்டுவிடும் பட்சத்தில் அது நீரழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தில் கொண்டு விடலாம்.
உடல் எடையை கட்டுப்படுத்துவது, ஆரோக்கியமான உணவு, மன அழுத்தத்தை குறைப்பது மற்றும் சீரான வாழ்க்கை முறையை பின்பற்றுவது ஆகியவை PCOD -ஐ திறம்பட சமாளிப்பதற்கு மிகவும் முக்கியம். PCOD என்பது டயாபடீஸ் பிரச்சினை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அதிக ட்ரைகிளிசரைடு அளவுகள், கொழுப்பு கல்லீரல் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே: புதுமண தம்பதியா நீங்க… வீட்ல சீக்கிரமே குவா குவா சத்தம் கேட்க இந்த உணவுகள் ஹெல்ப் பண்ணும்!!!
PCOS கொண்ட பெண்களில் உடற்பருமன், போதுமான உடல் செயல்பாடு இல்லாமை, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, அதிக கெட்ட கொலஸ்ட்ரால், கர்ப்பம், முதுமை, புகை பிடித்தல், வைட்டமின் டி குறைபாடு மற்றும் ஸ்டீராய்டை தவறாக பயன்படுத்துதல் ஆகியவை டயாபடீஸ் ஏற்படுவதற்கான சாத்தியத்தை விரைவுப்படுத்தும். ஆகவே PCOS கொண்ட பெண்கள் தங்களுக்கு டயாபடீஸ் ஏற்படாமல் இருக்க என்னென்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
*ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும்.
*தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம், உடல் பருமனாக இல்லாவிட்டாலும் கூட தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
*மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
*போதுமான அளவு தூக்கம் பெறுவது அவசியம்.
*மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் ஹார்மோன் சமநிலையை சரி செய்ய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
*தைராய்டு கோளாறுகள் இருந்தால் அவற்றுக்கு சிகிச்சை பெற வேண்டும்.
*அதிக லிப்பிட் அளவுகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்பதால் லிப்பிட் அளவுகளை சரியாக பராமரிக்க வேண்டும்.
*ஒவ்வொரு கர்ப்பத்தின் பொழுதும் டயாபடீஸ் இருக்கிறதா என்பதை சோதித்து பார்க்க வேண்டும்.
*அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
*புகைப்பிடித்தலை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், மது அருந்துவதை முடிந்த அளவு குறைத்துக் கொள்வது நல்லது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
நிதியைக் கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை, வாங்க வேண்டியது இவர்களின் உரிமை என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.…
குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி…
75 வருடமாக கொள்கையைக் கொண்ட நீங்கள் என்ன மாற்றம் செய்தீர்கள்? என ஆளும் அரசுக்கு ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.…
This website uses cookies.