சளி, இருமல் இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிடலாமா…???
Author: Hemalatha Ramkumar11 October 2024, 10:44 am
உங்களுக்கு வாழைப்பழம் என்றால் ரொம்ப பிடிக்குமா? ஆனால் வானிலை மாற்றத்தின் காரணமாக வாழைப்பழம் சாப்பிடலாமா வேண்டாமா அப்படின்னு உங்களுக்கு சந்தேகமா இருக்கா? காய்ச்சல் அல்லது சளி பிரச்சனை இருக்கும் போது உங்களுக்கு மிகவும் ஃபேவரட்டான வாழைப்பழம் சாப்பிடலாமா, வேண்டாமா? இந்த கேள்விக்கான பதிலை இப்போது பார்க்கலாம்.
ஆயுர்வேதம் என்ன சொல்கிறது ஆயுர்வேதத்தின்படி, வாழைப்பழங்கள் இயற்கையாக ‘குளிர்ந்த’ பொருட்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. வாழைப்பழங்கள் போன்ற குளிர்ந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் அதனால் சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அறிவியல் பூர்வமான அணுகுமுறை
பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு எதிராக வாழைப்பழங்கள் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உதவுவதாக அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. வாழைப்பழங்களில் உள்ள பனானா லிப்டின் என்ற புரோட்டின் வைரஸ்களுக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சளி, இருமல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு வாழைப்பழங்கள் சாப்பிட பரிந்துரை செய்யப்படுகிறது. வாழைப்பழங்களில் கரையும் நார்ச்சத்து இருப்பதால் இது இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
இதையும் படிக்கலாமே: நார்ச்சத்து அதிகமா சாப்பிட்டா இதெல்லாம் நடக்குமா…???
வாழைப்பழங்கள் நண்பரா எதிரியா
வாழைப்பழங்களில் ஹிஸ்டமைன் இருப்பதால் இது சளி உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் பின்னணியில் உள்ள உண்மை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. சளி உருவாவதில் வாழைப்பழங்களின் பங்கு இன்னும் முழுமையாக தெரியவில்லை. எனினும் வாழைப்பழத்தில் உள்ள வைரஸ் எதிர்ப்பு பண்புகள் காரணமாக இது சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் ஏற்படும் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் வாழைப்பழம்
பாரம்பரிய நம்பிக்கையின் படி, வாழைப்பழங்களை இரவு நேரத்தில் குறிப்பாக குளிர்காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எனினும் இந்த நேரங்களில் வாழைப்பழங்களை சாப்பிடுவதால் ஆபத்து ஏற்படும் என்பதற்கான எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. எப்பொழுதும் எந்த ஒரு உணவையும் மிதமான அளவு சாப்பிடுவதைப் போலவே வாழைப்பழங்களையும் மிதமாக சாப்பிடுவது நல்லது. அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக செரிமான பிரச்சனைகள் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சளி மற்றும் காய்ச்சல் இருக்கும் பொழுது வாழைப்பழங்களை சாப்பிடலாமா என்பது இன்னும் ஒரு விவாதமாகவே இருக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.