கண் இமைகளில் கூட பொடுகு வருமா… அலட்சியமா இருந்துடாதீங்க!!!

Author: Hemalatha Ramkumar
28 November 2024, 11:30 am

குளிர் காலத்தில் பொடுகு பிரச்சனை அதிகமாகவே இருக்கும். நம்முடைய தோல்பட்டை, ஆடைகள் என்று எங்கு பார்த்தாலும் வெள்ளை நிற திட்டுகளை பார்க்கும் பொழுது சற்று எரிச்சலாக தான் இருக்கும். ஆனால் பொடுகு என்பது தலை முடியை தவிர புருவங்கள், மீசை மற்றும் மூக்கு போன்றவற்றில் ஏற்படலாம் என்பது நமக்கு தெரியும். ஆயினும் பொடுகு உங்களுடைய கண் இமைகளில் இருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? பிற பகுதிகளை போல அல்லாமல் கண்களில் பொடுகு இருப்பதை நம்மால் வெறும் கண்ணால் பார்க்க இயலாது. ஆனால் இதனை சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால் அதனால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக லென்ஸ் அணிபவர்கள் கண் இமைகளில் ஏற்படும் பொடுகு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

உங்களுடைய கண் இமைகளின் அடிப்பகுதியில் அளவுக்கு அதிகமாக பாக்டீரியா இருப்பதன் காரணமாக இது ஏற்படுகிறது அல்லது உங்களுடைய எண்ணெய் சுரப்பிகள் அடைக்கப்பட்டு இருந்தாலோ அல்லது அதில் எரிச்சல் ஏற்பட்டாலோ பொடுகு வரலாம். பொடுகு என்பது குளிர் காலம் அல்லது வானிலை மாறும்பொழுது ஏற்படுவது வழக்கம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் ஐலைனர் மற்றும் மஸ்காரா அணிந்து கொண்டே தூங்குவதன் காரணமாகவும் கண் இமைகளில் பொடுகு ஏற்படலாம். 

கண் இமைகளில் பொடுகு இருப்பதற்கான அறிகுறிகள்

*கண்களின் ஓரங்களில் வெள்ளை நிற திட்டுக்கள் அல்லது எண்ணெய் போன்ற சுரப்பு 

*காலையில் தூங்கி எழும்பொழுது கண்களின் மேல் இமை மற்றும் கீழ் இமையாகிய இரண்டும் ஒட்டிக்கொள்வது. 

*அரிப்பு அல்லது எரிச்சல், சிவத்தல் 

*வீக்கம் 

*கண்களில் அடிக்கடி நீர் வடிதல் 

*வெளிச்சத்தை பார்க்கும் பொழுது கண் கூச்சம் ஏற்படுதல் 

ஆனால் கண் இமைகளில் பொடுகு ஏற்படுவது ஏன் ஆபத்தானதாக கருதப்படுகிறது? 

கண் இமைகளில் பொடுகு இருப்பது அழகு சார்ந்த பிரச்சனையையும் தாண்டி உங்களுடைய கண்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதனால் கண்களில் நாள்பட்ட எரிச்சல் மற்றும் சிவத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கண்ணிமைகள் முற்றிலுமாக உதிர்தல், வறட்சி, கார்னியா சேதம் மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படலாம். இதனை சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால் நாள்பட்ட கண் தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. 

எரிச்சல் காரணமாக நீங்கள் அளவுக்கு அதிகமாக கண்களை திறக்கும் பொழுது அது கார்னியாவை மிக மோசமாக பாதிக்கும். கண்களில் லென்ஸ் அணிபவர்கள் கண்களின் சுகாதாரத்தை கவனித்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு கண் இமைகளில் பொடுகு ஏற்பட்டால் அதனால் கண் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

இந்த வெள்ளை நிற திட்டுக்கள் மற்றும் பாக்டீரியா காண்டாக்ட் லென்ஸுகளில் புகுந்து தொற்றை ஏற்படுத்தும். காண்டாக்ட் லென்ஸுகளை சுத்தமாக பராமரிப்பது வழக்கமான முறையில் சுத்தம் செய்வது மற்றும் பொடுகை சமாளிப்பதற்கு ஏதேனும் சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம். 

இதையும் படிக்கலாமே: ஃபேஷியல் வைப்ஸ் பயன்படுத்துவது உண்மையில் நல்லதா…???

கண் இமைகளில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை தவிர்ப்பதற்கான வழிகள்

*வழக்கமான முறையில் கண் இமைகளை கிளென்சர் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். 

*காலாவதியான மேக்கப் ப்ராடக்டுகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் 

*தூங்குவதற்கு முன்பு கண்களில் அணிந்துள்ள மேக்கப்பை அகற்றி விடுங்கள் 

*தலைமுடியில் பொடுகு இருந்தால் அது கண் இமைகளில் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே முதலில் அதற்கான சிகிச்சையை பெற்றுக் கொள்ளுங்கள். 

*மேக்கப் போடுவதற்கு பயன்படுத்தும் கருவிகளை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 

*உங்களுடைய கண் இமைகளில் பொடுகு அல்லது அதற்கான அறிகுறிகள் இருப்பதை நீங்கள் கவனித்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகவும். அவர் உங்களுக்கு மருந்துகள் அல்லது கிரீம், ஸ்டிராய்டுகள் போன்றவற்றை பரிந்துரைக்கலாம். 

*இதனை சமாளிப்பதற்கு தேயிலை மர எண்ணெய் கொண்ட கண் ஸ்க்ரப்கள் மற்றும் கண் வைப்ஸுகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Ajith Kumar Vidamuyarchi movie update அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..பல நாள் கேள்விக்கு பதில் கொடுத்த படக்குழு..!
  • Views: - 51

    0

    0

    Leave a Reply