சளி, இருமல் இருக்கும் போது எந்த மாதிரி உணவுகளை சாப்பிட வேண்டும்???

Author: Hemalatha Ramkumar
25 November 2024, 4:26 pm

குளிர் காலம் வந்து விட்டாலே சளி மற்றும் காய்ச்சல் அடிக்கடி வர ஆரம்பித்து விடும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தையும் பாதிக்க கூடியது. ஒரு தும்மல் நமக்கு தொண்டையில் தொற்றை ஏற்படுத்தி, அதனால் அசோகரியத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தலாம். இந்த பிரச்சனை நமக்கு பல்வேறு காரணங்களால் ஏற்பட வாய்ப்புள்ளது. அதில் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள், அலர்ஜி அல்லது சுற்றுச்சூழல் காரணிகள் போன்றவை காரணமாக இருக்கலாம். எனினும் ஒரு சில உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு ஏற்பட்டுள்ள சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து உங்களை ஆற்றுவதற்கு உதவும். அந்த வகையில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற சமயத்தில் நீங்கள் சாப்பிட வேண்டிய சில உணவுகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

இஞ்சி 

இஞ்சி என்பது இருமல் மற்றும் சளியில் இருந்து இயற்கை நிவாரணம் தருவதற்கான அற்புதமான ஒரு உணவு. இதில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் தொண்டை புண்ணை ஆற்றி, மூக்கடைப்பை போக்குவதற்கான கதகதப்பு விளைவுகளை கொண்டுள்ளது. இது எளிமையான தீர்வாக இருந்தாலும் மிகவும் திறமையான ஒரு இயற்கை மருந்தாக இருக்கிறது. சளி, காய்ச்சல் மட்டுமல்லாமல் சுவாச சம்பந்தப்பட்ட அசௌகரியங்களில் இருந்தும் இது தீர்வு தருகிறது.

தேன் 

வறட்டு இருமலை ஆற்றுவதற்கான பண்புகள் தேனில் இயற்கையாகவே உள்ளது. தேனானது எரிச்சல் மற்றும் அசௌகரியத்தில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. தேனை நீங்கள் பச்சையாகவே அப்படியே சாப்பிடுவது சிறந்தது. இது இருமலை போக்கி உங்களுக்கு ஓய்வு அளிக்கக்கூடிய பலன்களை தருகிறது. 

சர்க்கரைவள்ளி கிழங்கு

ஊட்டச்சத்து நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கு சளியை குறைக்கும் விளைவுகளை கொண்டுள்ளது. வைட்டமின் A அதிகம் காணப்படுவதால் சர்க்கரை வள்ளி கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகளுக்கு எதிராக சண்டை போடுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் தொண்டை புண்ணை ஆற்றி மூக்கடைப்பில் இருந்து விரைவான நிவாரணம் தருகிறது. 

காய்கறி சூப் 

காய்கறி சூப் என்பது இருமலை போக்குவதற்கான சிறந்த உணவாக அமைகிறது. சூடான சூப்பில் இருந்து வரும் நீராவி மூக்கடைப்பை போக்குகிறது. அதே நேரத்தில் காய்கறியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொண்டை புண்ணை ஆற்றுகிறது. 

இதையும் படிக்கலாமே: ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்சனைக்கு டா-டா சொல்ல ஆசையா இருந்தா இந்த ஃபேஷியல் டிரை பண்ணி பாருங்க!!!

மஞ்சள் 

மஞ்சள் என்பது இருமல் மற்றும் சளிக்கான ஒரு இயற்கை தீர்வு. இதில் உள்ள குர்குமின் என்ற ஆக்டிவ் காம்பவுண்ட் வீக்க எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளதால் இது மூக்கடைப்பை போக்கி, தொண்டை புண்களை ஆற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 109

    0

    0