பாதாம் பருப்பு சாப்பிடுறது நல்ல விஷயம் தான்…. ஆனா இந்த தப்பை மட்டும் பண்ணிட்டா அதனால ஒரு பிரயோஜனமும் கிடைக்காது!!!

Author: Hemalatha Ramkumar
20 January 2025, 6:26 pm

ஊட்டச்சத்துக்களால் நிரம்பி வழியும் பாதாம் பருப்பு நம்முடைய ஆரோக்கியமான டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சிறந்த ஒரு உலர்ந்த பழமாக அமைகிறது. பச்சையாகவோ அல்லது ஊற வைத்தோ பாதாம் பருப்பு சாப்பிடுவது நமக்கு எக்கச்சக்கமான பலன்களை அள்ளித் தருகிறது. வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் நிறைந்த பாதாம் பருப்பு உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதன் காரணமாக ஒரு சூப்பர் ஃபுட்டாக கருதப்படுகிறது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டின் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து, ரத்த சர்க்கரை அளவை சீராக்கி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மேலும் பாதாம் பருப்பில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினால் இது செல் சேதத்திற்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது. மேலும் வீக்கத்தை குறைத்து, நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. எனினும் பாதாம் பருப்பை நாம் சரியாக தான் சாப்பிட்டு வருகிறோமா? இந்த பதிவில் பாதாம் பருப்பு சாப்பிடும் போது நாம் செய்யக்கூடிய சில பொதுவான தவறுகள் பற்றி பார்க்கலாம்.

அளவு 

பாதாம் பருப்பு ருசியானதாக இருப்பதால் அளவு தெரியாமல் ஒரு சிலர் அதனை அதிகப்படியாக சாப்பிடுவதுண்டு. ஆனால் பாதாம் பருப்பை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள், அலர்ஜி மற்றும் அதிகமான கலோரிகளும், கொழுப்பும் சேர்ந்துவிடும்.

வறுத்த பாதம் 

பாதாம் பருப்பை வறுத்து சாப்பிடுவது அவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்காது. ஏனெனில் இந்த வறுக்கும் செயல்முறையானது அதன் ஊட்டச்சத்துக்களை குறைத்து விடுகிறது. மறுபுறம், பாதாம் பருப்பை அப்படியே தோல் உரித்தோ அல்லது உரிக்காமலோ சாப்பிடுவது பல நன்மைகளை தரும். பாதாம் பருப்பை தோலோடு சாப்பிடுவதால் அதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்களும், நார்ச்சத்தும் நமக்கு முழுமையாக கிடைக்கும். அதே நேரத்தில் தோலுரித்த பாதாம் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரோட்டீனின் நல்ல மூலமாக அமைகிறது.

குறிப்பிட்ட சில உடல்நல பிரச்சனைகள் 

ஒரு சில உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருபவர்கள் பாதாம் பருப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நட்ஸ் வகைகளுக்கு அலர்ஜி இருப்பவர்கள் பாதாம் பருப்பை சாப்பிட வேண்டாம். அதுமட்டுமல்லாமல் ஒரு சில விதமான செரிமான கோளாறுகள் இருப்பவர்களும் பாதாம் பருப்பை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே: எனர்ஜி டிரிங்க்ஸ் ரொம்ப குடிப்பீங்களோ… அப்போ உங்களுக்கு பிரச்சினை கன்ஃபார்ம்!!!

தொடர்ந்து சாப்பிடாமல் இருப்பது 

பாதாம் பருப்பை எப்போதாவது சாப்பிடுவதும் ஒரு தவறுதான். தொடர்ச்சியாக அதனை சாப்பிட்டு வந்தால் மட்டுமே அதன் பலன்களை உங்களால் முழுமையாக பெற முடியும். எப்போதாவது பாதாம் பருப்பை சாப்பிடுவதால் ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் வைட்டமின் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு, இதய ஆரோக்கியம், செரிமானம் மற்றும் ஆற்றல் அளவுகளில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறையலாம்.

சேமிப்பு 

பாதாம் பருப்புகளை நீங்கள் சரியான முறையில் சேமித்து வைக்க வேண்டும். வெப்பம், வெளிச்சம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஃபிளேவரை பாதிக்கலாம் எனவே காற்று உள்ளே செல்ல இயலாத ஏர்டைட் கண்டைனரில் பாதாம் பருப்பை போட்டு உலர்ந்த இடத்தில் வைப்பது அதனை ஃபிரஷ்ஷாக வைப்பதற்கு உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Siragadikkai Aasai Vidhya Reveal the Truth about Leaked Video மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!