சம்மர் டிப்ஸ்: ACயை விட பன்மடங்கு குளிர்ச்சி விளைவை ஏற்படுத்தும் விதைகள்!!!

Author: Hemalatha Ramkumar
27 April 2022, 9:59 am

வெப்பநிலை படுமோசமாக அதிகரித்து வருவதால், கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். ஹைட்ரேட்டிங் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பருவகால பழங்களை நாம் உட்கொள்ள வேண்டும் என்றாலும், பல உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் விதைகளைத் தவறவிடாதீர்கள். மேலும் இவை உடலை குளிர்விக்க உதவும். அவற்றில் ஒன்று சப்ஜா அல்லது துளசி விதைகள். இது பொதுவாக ஃபலூடா விதைகள் என்று அழைக்கப்படுகிறது. இவை ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரம் மற்றும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலைக்கு ஏற்றது.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட, துளசி விதைகளில் புரதம், அத்தியாவசிய கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இது இனிப்பு துளசி என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இது புனித துளசி அல்லது துளசியிலிருந்து வேறுபட்ட ஒன்று ஆகும். இது பல இந்திய குடும்பத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் மற்றும் அதன் நோய் எதிர்ப்பு சக்திக்கு பெயர் போனது.

இவை பெரும்பாலும் சியா விதைகளுடன் குழம்பப்படுகின்றன. ​​துளசி விதைகளில் சியா விதைகளை விட அதிக புரதம் உள்ளது மற்றும் கலோரிகள் எதுவும் இல்லை. இந்த குணங்கள் இதனை ஒரு ஆசிய சூப்பர்ஃபுட் ஆக்குகிறது.

சுகாதார நலன்கள்:
அதிக நார்ச்சத்து மற்றும் குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் மலச்சிக்கலைக் குறைக்க உதவுகிறது, திருப்தியைத் தூண்டுகிறது, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு (UTI) தீர்வாகிறது, சிறுநீரகங்களில் உள்ள நச்சுகளை நீக்குகிறது மற்றும் மாவுச்சத்தை மெதுவாக இரத்த சர்க்கரையாக மாற்றுவதன் மூலம் எடை இழப்புக்கு உதவுகிறது.

*துளசி விதைகள் பசியை அடக்கும் மருந்தாக இருப்பதால் அவை எடை குறைய உதவுகிறது.
*இவை இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
* மலச்சிக்கலை போக்க உதவுகின்றன.
*அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.
* அவை சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்லது.
*சப்ஜா விதைகள் சிறுநீர்ப்பெருக்கி என்று அழைக்கப்படுகிறது.
* அவை ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்கின்றன. எனவே, அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கு இது சிறந்தது.

இந்த விதைகளை உட்கொள்வதற்கான எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள வழி, அவற்றை தண்ணீரில் ஊறவைப்பதாகும். 1-2 டீஸ்பூன் சப்ஜா விதைகளை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைதது தினமும் குடிக்கவும்.

அவை தனித்தனி சுவை இல்லாததால், சப்ஜா விதைகளை பல்வேறு உணவுகள் மற்றும் பானங்களில் சேர்க்கலாம். இதன் மூலம் பானங்களின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கவும் குளிர்ச்சியான விளைவையும் சேர்க்கலாம். இருப்பினும், அதன் பல நன்மைகள் இருந்தபோதிலும், இது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவர்கள் அவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

  • Sasikumar visits Sabarimala Ayyappa ஸ்வாமியே சரணம்…சபரிமலைக்கு சென்ற பிரபல நடிகர்…படையெடுத்த ரசிகர்கள்..!
  • Views: - 1709

    0

    0