தெரிஞ்சோ தெரியாமலோ இதெல்லாம் செய்து உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள்!!!

Author: Hemalatha Ramkumar
23 September 2024, 6:25 pm

நம்மில் பெரும்பாலானவர்கள் நமது ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தி விடுகிறோம். உடல் மற்றும் மன நலனை கருத்தில் கொள்ளாமல் நாம் நினைத்த மாதிரியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தினசரி டார்கெட் மற்றும் டெட்லைன் என்று நமது வாழ்க்கை பிசியாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்பத்தை சார்ந்திருக்கும் இந்த வாழ்க்கை முறையில் கிட்டத்தட்ட நாம் ஒரு பந்தயத்தில் ஓடுவது போல ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம்மை அறியாமலையே நாம் செய்யக்கூடிய ஒரு சில விஷயங்கள் நம்முடைய ஆரோக்கியத்தை பாதிக்கும். அந்த வகையில்  நாம் தொடர்ச்சியாக ஒரு சில வருடங்களுக்கு குறைவாக தூங்கினால் அதனால் என்ன ஆகும் என்று என்றைக்காவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? ஆம், குறைவான தூக்கம் என்பது நமது மூளையை மோசமான அளவில் பாதிக்கக்கூடும். அந்த வகையில் நாம் தினமும் செய்யும் சிறு சிறு தவறுகள் நம்முடைய மூளைக்கு எந்த அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

போதுமான அளவு உடல் செயல்பாடு இல்லாதது 

உடல் செயல்பாடு என்பது ஞாபக சக்தி மற்றும் கவனம் போன்ற அறிவுத்திறன் செயல்பாடுகளை மேம்படுத்தும். நீங்கள் போதுமான அளவு உடற்செயல்பாட்டில் ஈடுபடாத போது அதனால் உங்களுடைய அறிவுத்திறன் குறையும். அது மட்டுமல்லாமல் உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதட்டம் அதிகரிக்கலாம். இது குறைவான எண்டார்பின்கள் காரணமாக ஏற்படுகிறது. இந்த சமநிலையின்மை விளைவாக உங்களுடைய மனநிலை சீர்குலைக்கப்பட்டு, ஒட்டுமொத்த மன ஆரோக்கியம் மோசமாகும். எனவே உங்களுடைய மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். 

அதிக சத்தத்தில் இசை கேட்பது 

தொடர்ச்சியாக நீங்கள் அதிக வால்யூம் வைத்து மியூசிக் கேட்டுக் கொண்டே இருக்கும் ஒரு நபர் என்றால் நிச்சயமாக அதனால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது. இது உங்களுடைய மன அழுத்தத்தை அதிகரித்து, அதன் விளைவாக அறிவுதிறன் செயல்பாட்டில் தாக்கம் ஏற்படலாம். அதிக வால்யூம் என்பது உடலில் உள்ள கார்டிசால் அளவை அதிகரிக்கும். இது நேரடியாக மன ஆரோக்கியத்தை பாதித்து பதட்டத்தை ஏற்படுத்துகிறது. மியூசிக் என்பது நம் மனநிலையை மேம்படுத்துவது மற்றும் ஒட்டுமொத்த அறிவு திறன் செயல்பாட்டை அதிகரிப்பது போன்ற பல்வேறு நன்மைகளை அளித்தாலும் அதனை அதிக வால்யூம் வைத்து கேட்கும்பொழுது அதனால் மோசமான விளைவுகள் ஏற்படும்.

அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவது 

சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் மூளையின் ஆரோக்கியம் சேதமடையும். சர்க்கரையானது ஞாபக சக்தி இழப்பு மற்றும் மோசமான கற்பிக்கும் திறனோடு தொடர்பு கொண்டிருக்கிறது. சர்க்கரை வீக்கம் மற்றும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை உண்டாக்கி மூளையில் உள்ள செல்களை சேதப்படுத்துகிறது. இதன் விளைவாக நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். எனவே வழக்கமான முறையில் அதிக அளவு சர்க்கரை நிறைந்த பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். 

மேலும் படிக்க: ங்கள் மூளை வெறுக்கும் சில உணவுகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா???

குறைவான சூரிய வெளிச்சம் 

Health Tips Tamil

குறைவான சூரிய வெளிச்சம் காரணமாக நமது மனநலன் பாதிக்கப்படுகிறது. உங்களுக்கு போதுமான சூரிய வெளிச்சம் கிடைக்காத போது அதனால் பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஏற்படுகிறது. இது தவிர சூரிய வெளிச்சமானது நமது உடலின் வைட்டமின் D உற்பத்திக்கு பொறுப்பாகிறது. ஆகவே தினமும் உங்களுக்கு போதுமான அளவு வைட்டமின் D கிடைப்பதை உறுதிப்படுத்துங்கள். 

நாள்பட்ட நீரிழப்பு

நாள்பட்ட நீரிழப்பு நம்முடைய மூளையின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இதனால் ஞாபக சக்தி ஒட்டுமொத்த மன தெளிவு, கவனம் போன்ற அறிவுதிறன் செயல்பாடுகள் பாதிப்படைகிறது. நமது நீர்ச்சத்து அளவுகளில் சிறியதாக ஒரு மாற்றம் ஏற்பட்டாலே அது மூளையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவே தொடர்ச்சியாக உங்களுக்கு நீர்ச்சத்து இழப்பு இருக்கிறது என்றால் அது உங்களுடைய மன அழுத்த அளவுகளை அதிகரித்து அறிவுத்திறன் செயல்பாட்டை குறைக்கும். இதனால் எந்த ஒரு விஷயத்திலும் உங்களால் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். மேலும் தலைவலி, மனநிலை மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் உண்டாகும். ஆகவே உங்கள் மூளையின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கும் ஒட்டுமொத்த மனநலனுக்கும் போதுமான அளவு தண்ணீர் பருகுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள். 

மன அழுத்தத்தை கவனித்துக் கொள்ளாமல் இருப்பது 

நாள்பட்ட மன அழுத்தம் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அது ஒருவரது அறிவுத்திறன் செயல்பாடு மற்றும் மனநலனாகிய இரண்டையுமே பாதிக்கிறது. நாள்பட்ட மன அழுத்தம் விளைவாக பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஏற்படலாம். எனவே உங்களுடைய மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது அவ்வளவு முக்கியம். 

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 173

    0

    0