ஒரு சில நேரங்களில் அவசரத்தில் சமைக்கும் போது, உணவுகள் கரிந்து போவதுண்டு. கரிந்து போன உணவாக இருந்தாலும், அதனை வீணாக்கக்கூடாது என்பதற்காக ஒரு சிலர் அதனை சாப்பிட்டு விடுவார்கள். இவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். கரிந்து போன உணவுகளை சாப்பிடுவது பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் அவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
பல ஆண்டுகளாக, கரிந்த உணவுக்கும் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பைக் கண்டறியும் முயற்சிகள் கூட செய்யப்பட்டுள்ளன. இதனால் நீங்கள் கரிந்த உணவை சாப்பிட்டால் உங்களுக்கு புற்றுநோய் வரும் என்று அர்த்தம் இல்லை. ஆனால் நீங்கள் கரிந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்காவிட்டால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
நாம் சமைக்க ஆரம்பித்தவுடன், உணவின் அமைப்பு மற்றும் அதன் நிறம் மாறுவதைக் காண்கிறோம். இது மென்மையாக மாறுவது மட்டுமல்லாமல், சமைக்கும் போது பல இரசாயன மாற்றங்களுக்கும் உட்படுகிறது. இவை அனைத்தும் மனித நுகர்வுக்கு ஏற்றதாக மாற்ற உதவுகிறது. வெப்பம் இரசாயன எதிர்வினைகளை துரிதப்படுத்துகிறது. இது உணவில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. கரிந்து போன உணவு ஜீரணிக்க கடினமாகவும், வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும் ஒன்றாகவும் உள்ளது. இது நமக்கு ஆரோக்கியமற்ற அக்ரிலாமைடு போன்ற சேர்மங்களை வெளியிடுகிறது.
அதிக வெப்பநிலையில் சமைக்கும் போது, உருளைக்கிழங்கு, தானியங்கள், காபி மற்றும் ரொட்டி போன்ற சில உணவுகளில் அக்ரிலாமைடு உருவாகலாம். அதிக அளவு அக்ரிலாமைடு புற்றுநோயை ஏற்படுத்துவதாக விலங்கு ஆராய்ச்சியில் காட்டப்பட்டுள்ளது.
அக்ரிலாமைடு புற்றுநோயை உண்டாக்கும் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்றாலும், கரிந்து போன உணவுகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு ஃபிரஷான பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். அதே போல அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். புற்றுநோயைத் தடுக்கும் உணவுகளையும் நீங்கள் முயற்சி செய்யலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.