தினமும் முட்டை சாப்பிடுவது பெரிதல்ல… எப்போது சாப்பிடுவது சரி என்பதையும் தெரிஞ்சுக்கணும்!!!

Author: Hemalatha Ramkumar
19 November 2024, 10:38 am

முட்டை என்பது ஒரு பல்வகை உணவு. முட்டையை வைத்து பலவிதமான உணவுகளை சமைத்து சாப்பிடலாம். வீட்டில் வேற எந்த ஒரு பொருள் இல்லாவிட்டாலும் சரி, முட்டை இருந்தால் அன்றைய உணவை சிறப்பாக செய்து முடித்து கொடுக்க கூடிய அளவிற்கு இது விலை மலிவான, ஊட்டச்சத்து மிக்க மற்றும் அதே நேரத்தில் சுவையான ஒரு உணவு. புரோட்டீனின் சிறந்த மூலமாக கருதப்படும் முட்டை சூப்பர்ஃபுட்டாக விளங்குகிறது. 

நம்முடைய அன்றாட உணவில் முட்டையை சாப்பிடுவதன் மூலம் நமக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன் கிடைக்கும். ஆனால் முட்டையை சாப்பிடுவதற்கான சிறந்த நேரம் எது என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். எனவே இந்த பதிவில் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதனை சாப்பிடுவதற்கான சரியான நேரம் ஆகிய தகவல்கள் பற்றி பார்க்கலாம்.

ஒரு முழு முட்டையில் தோராயமாக 75 கலோரிகள் உள்ளன. இதில் 5 கிராம் கொழுப்பு, 6 கிராம் புரோட்டீன், 67 மில்லி கிராம் பொட்டாசியம், 70 மில்லி கிராம் சோடியம் மற்றும் 210 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இதில் வைட்டமின் A, ஃபோலேட், வைட்டமின் B5, வைட்டமின் B12, ரிபோஃபிளாவின், செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு உள்ளது. மேலும் வைட்டமின் D, வைட்டமின் E, வைட்டமின் B6, கால்சியம் மற்றும் சிங்க் போன்றவை சிறிய அளவுகளில் காணப்படுகின்றன. 

இதையும் படிக்கலாமே: ஓஹோ… ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான இரகசியம் இது தானா!!!

முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 

*முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் இருப்பதால் இது நம்முடைய உடலில் உள்ள ரத்த கொலஸ்ட்ராலை எதிர்மறையாக பாதிக்காது. 

*முட்டையை அன்றாட உணவில் சேர்ப்பது இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும். 

*முட்டையில் காணப்படும் லியூட்டின் மற்றும் சியாசாந்தின் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கேட்டராக்ட் மற்றும் வயது தொடர்பான கண் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது. கீரைகளில் இந்த ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருந்தாலும் முட்டைகள் இந்த ஆன்டி-ஆக்சிடன்டிற்கான சிறந்த மூலமாக கருதப்படுகின்றன. 

*நமது உடலில் உள்ள திசுக்கள் மற்றும் தசைகளை பராமரித்து அவற்றை சரி செய்வதற்கு தேவையான புரோட்டீன் முட்டையில் உள்ளது. 

*மேலும் வைட்டமின் மிகுந்த முட்டை நம்முடைய மூளையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது. 

*முட்டை குறைந்த கலோரி அதே நேரத்தில் அதிக புரோட்டீன் கொண்டுள்ளதால் உடல் எடையை குறைப்பதற்கு இது ஒரு அற்புதமான உணவு.

*முட்டை சாப்பிடுவது நீண்ட நேரத்திற்கு உங்களை வயிறு நிரம்பிய உணர்வோடு வைத்து உணவுக்கு இடையே நொறுக்கு தீனி சாப்பிடுவதற்கான தேவையை குறைக்கிறது. 

முட்டையை சாப்பிடுவதற்கான சிறந்த நேரம்: காலை அல்லது இரவு? 

முட்டையை சாப்பிடுவதற்கான சிறந்த நேரம் எது என்பது பற்றி நீங்கள் யோசித்து வந்தால் அது ஒவ்வொரு காரணத்தின் அடிப்படையில் மாறுபடலாம். காலையில் உங்களுடைய நாளை முட்டைகள் மூலமாக ஆரம்பிப்பது உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, உங்களுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். முட்டை சாப்பிடுவது உங்களை நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வோடு வைக்கும் என்பதால் காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு இடையே உங்களுக்கு பசி எடுக்காது. காலை நேரத்தில் பொதுவாக புரோட்டீன் நிறைந்த உணவு சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. எனவே காலையில் முட்டை சாப்பிடுவது சிறந்ததாக கருதப்படுகிறது. 

காலை உணவு என்பது மூளைக்கான உணவு என்று அறியப்படுகிறது. முட்டையில் உள்ள கோலின் மூளையின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. ஞாபக சக்தி, மனநிலை மற்றும் புத்திசாலித்தனத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு கொண்டுள்ள அசிட்டைல்கோலினை உற்பத்தி செய்வதற்கு கோலின் தேவைப்படுகிறது. இது ஒரு வைட்டமினோ அல்லது தாதுவோ கிடையாது. 

மேலும் இது மூளை செயல்பாடு மற்றும் மேம்பாட்டிற்கு அவசியமான DNA தொகுப்புக்கும் தேவைப்படுகிறது. ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் கோலின் நம்முடைய மூளை செயல்பாட்டை அதிகரிக்கிறது. நாள் முழுவதும் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானதாக கருதப்பட்டாலும் இரவு நேரத்தில் அதனை சாப்பிடுவது உங்களுக்கு அதிக பலன்களை அளிக்கும்.

ஒருவேளை மாலை நேரத்தில் நீங்கள் ஒர்க்அவுட் செய்பவராக இருந்தால் அதன் பிறகு முட்டை சாப்பிடுவது தசைகளை சீர் செய்யவும், அதன் வளர்ச்சிக்கும் உதவும். உங்களுடைய தசைக்கு தேவையான புரோட்டீனை முட்டைகள் வழங்கும். மேலும் முட்டையில் உள்ள அமினோ அமிலங்கள் தசை பருமன் மற்றும் வலிமையை அதிகரிக்கிறது. 

இரவு நேரத்தில் முட்டை சாப்பிடுவது உங்களுக்கு நல்ல இரவு தூக்கத்தை கொடுக்கும். ஏனெனில் முட்டையில் காணப்படும் என்ற அமினோ அமிலம் செரடோனின் ஹார்மோன் உற்பத்தியில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. இது மெலடோனினாக மாற்றப்படுகிறது. மெலடோனின் என்பது தூக்க-விழிப்பு சுழற்சியை சீராக்குவதற்கு அவசியம். எனவே முட்டைகள் சாப்பிடுவது உங்களுடைய மெலடோனின் அளவுகளை அதிகரித்து உங்களை ஓய்வு நிலைக்கு கொண்டு சென்று உடனடியாக தூக்கத்தை வரவழைக்கும்.

  • Bayilvan கஸ்தூரி மாதிரி ஜெயிலுக்கு போக ரெடியா இரு… எச்சரிக்கும் பயில்வான் ரங்கநாதன்!
  • Views: - 59

    0

    0

    Leave a Reply