நாள் முழுவதும் அளவில்லா உற்சாகத்தை பெற தூங்க செல்லும் முன் இந்த ஐந்து விஷயங்களை பண்ணுங்க!!!

Author: Hemalatha Ramkumar
29 June 2023, 10:36 am

தூக்கம் என்பது நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒரு செயலாகும். நாம் இரவு தூங்கும் பொழுது நமது உடலில் இருக்கக்கூடிய உள் உறுப்புகளானது ஆக்டிவ் ஆகி ஏராளமான செயல்களில் ஈடுபடுகிறது. ஆனால் நாம் போதுமான நேரம் தூங்காமல் இருந்தால் இந்த செயல்பாடுகளில் தடை உண்டாகும். இது நேரடியாக நமது உடலை பாதிக்கும். தூங்குவதற்கு முன்பு ஒரு சில விஷயங்களை செய்வதன் மூலம் நமது ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது உடல் ரீதியான மட்டுமல்லாமல், மனம் சார்ந்த பிரச்சனைகளையும் சமாளிக்க உதவுகிறது. அது என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

நீங்கள் படுக்கைக்கு சென்றவுடன் கண்ணை மூடி தூங்குவதற்கு முன்பாக அடுத்த நாள் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு கொள்ளுங்கள். டைரியிலோ அல்லது மொபைல் போனிலோ நீங்கள் நாளை என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை நேரத்துடன் திட்டமிட்டு கொள்வது உங்கள் மனதிற்கு ஒரு தெளிவை தரும்.

படுக்க செல்லும் முன்பு ஒரு காப்பர் வாட்டர் பாட்டில் எடுத்து அது முழுவதும் தண்ணீரை நிரப்பி வையுங்கள். அடுத்த நாள் காலை எழுந்ததும் அந்த தண்ணீரை பருகுங்கள். இதனால் உங்கள் உடலுக்கு காப்பர் சத்து கிடைக்கும், உடல் உஷ்ணம் குறையும், உடலில் தேங்கி இருக்கக்கூடிய கழிவுகள் அனைத்தும் வெளியேறும். ஆகையால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ஆனால் செப்பு பாத்திரங்களில் ஒருபோதும் சுடுதண்ணீரை பயன்படுத்தக் கூடாது என்பதை மனதில் கொள்ளவும்.

தூங்கும் முன்பு உங்கள் பாதத்தை ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்ற ஏதாவது ஒரு எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்யும் பழக்கத்தை பின்பற்றுங்கள். நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து களைத்து போன உங்கள் கால்களில் இருக்கக்கூடிய வலி இவ்வாறு செய்வதால் பஞ்சாக பறந்து போகும். பாதாம், ஆலிவ் எண்ணெய் இல்லாத சமயத்தில் தேங்காய் எண்ணெயை கூட பயன்படுத்தலாம். இது உங்களுக்கு நல்ல தூக்கத்தை தர உதவும்.

உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளில் நமது உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் காணப்படுகிறது. இவற்றை இரவு நேரத்தில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். காலை எழுந்ததும் காப்பர் பாட்டிலில் நிரப்பிய தண்ணீர் குடித்துவிட்டு, காலை கடன்களை கழித்த பின் முதல் உணவாக இவற்றை சாப்பிடவும். இவ்வாறு நீங்கள் செய்தால் அளவில்லாத உற்சாகத்தை பெறுவீர்கள். மேலும் உங்களை எந்த ஒரு நோயும் அண்டாது.

தூங்குவதற்கு முன்பு வெளிச்சத்தை வெளியிடக்கூடிய டிவி, போன், லேப்டாப் போன்ற பொருட்களை பார்ப்பதை தவிர்க்கவும். இது உங்கள் தூக்கத்தை மட்டும் பாதிக்காமல் பல்வேறு விதமான நோய்களையும் உண்டாக்கும். ஆகவே நீங்கள் தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக இதுபோன்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக நடை பயிற்சி செய்வது, புத்தகம் வாசிப்பது, அன்புக்குரியவர்களிடம் பேசுவது போன்றவற்றை நீங்கள் செய்யலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 3276

    0

    0