சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா என்ற கேள்வி பல நபர்களுக்கு உண்டு! உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அனைவரும் சாதம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. உலகின் பாதிப் பகுதியினருக்கு அரிசி பிரதான உணவாக இருந்தாலும், எடை அதிகரிப்பதில் இது ஒரு குற்றவாளியாகக் கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையில் உடல் எடையை அதிகரிக்குமா? இது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
அரிசிக்கும் உங்கள் எடை அதிகரிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரிசி உங்கள் உடல் கொழுப்பை அதிகரிக்காது. உங்கள் எடை அதிகரிப்பதற்கு அரிசி அல்லது ரொட்டி இரண்டுமே காரணம் அல்ல.
எடை அதிகரிப்பின் முக்கியக் காரணம் அதிகப்படியான உணவு சாப்பிடுவது தான். அளவாக உண்ணும் உணவுகள் உங்களுக்கு நன்மை பயக்கும். அதிகமாக சாப்பிடுவதும், அன்றைய நாளுக்கு தேவையான கலோரிகளை விட அதிகமாக எடுத்து கொள்வதும் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்ற கூற்றை ஆய்வுகள் ஆதரிக்கின்றன. இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் ஒரே காரணியாக இல்லாவிட்டாலும், தேவையற்ற எடையை அதிகரிக்கச் செய்வதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.