இது உங்களுக்கு முதல் குழந்தையா….அப்படின்னா பிரக்னன்சி டைம்ல என்னென்ன செய்யணும் என்னவெல்லாம் செய்யக்கூடாதுன்னு நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்!!!

Author: Hemalatha Ramkumar
23 September 2024, 5:11 pm

முதல் முறையாக தாயாவது என்பது ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையே மாற்றி அமைக்கக்கூடிய ஒரு மகிழ்ச்சி நிறைந்த மற்றும் எதிர்பார்ப்புகள் அடங்கிய ஒரு அனுபவமாகும். எனினும் இந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பல்வேறு கேள்விகள் மற்றும் நமக்கு பிடித்தமானவர்களிடமிருந்து வரக்கூடிய ஆலோசனைகள் ஒருவிதமான குழப்பமான மனநிலையை ஏற்படுத்துகிறது. பாரம்பரியமான குறிப்புகளை பயன்படுத்த வேண்டுமா அல்லது நிபுணர்களின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டுமா? உங்களுடைய கவலை எங்களுக்கு புரிகிறது. அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம். உங்களுக்கு இது முதல் பிரசவம் என்றால் நீங்கள் அத்தியாவசியமாக செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

செய்ய வேண்டியவை சரிவிகித உணவு 

சரிவிகித உணவு என்பது கர்ப்ப காலத்தில் மிகவும் அவசியமானது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் கவனம் செலுத்துங்கள். அதிலும் குறிப்பாக பல்வேறு நிறங்கள் அடங்கிய காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் கோழி இறைச்சி, மீன், பீன்ஸ் போன்ற மெலிந்த புரதங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணவு உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் போதுமான ஆற்றலும், ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதை உறுதி செய்யும்.

யோகா மற்றும் தியானம் 

கர்ப்ப காலத்தில் உங்களுடைய உடல் ஆரோக்கியம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு உங்களுடைய மன நலனும் முக்கியம். கர்ப்ப காலத்தில் அவ்வப்போது மனநிலை மாற்றங்கள் மற்றும் வருத்தங்கள் ஏற்படுவது சகஜம். இவற்றை சமாளிப்பதற்கு நீங்கள் யோகா மற்றும் தியானம் போன்ற மனநிலையை மேம்படுத்தும் நுட்பங்களை பயன்படுத்தலாம். 

போதுமான அளவு உறக்கம் 

போதுமான அளவு உறக்கத்தை உறுதி செய்யும் பொழுது அது உங்களுடைய மன ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதற்கும் உதவும். 

மேலும் படிக்க: தெரிஞ்சோ தெரியாமலோ இதெல்லாம் செய்து உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள்!!!

வழக்கமான ஹெல்த் செக்கப் 

health tips for pregnant women

ஒவ்வொரு மாதமும் நீங்கள் மறக்காமல் மருத்துவரிடம் செக்கப் செல்வது அவசியம். அவ்வாறு செல்வது உங்களுடைய கருவின் வளர்ச்சியை கண்காணிப்பதற்கு உதவும். மேலும் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதனை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்து அதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். 

செய்யக்கூடாதவை புகைபிடித்தல் 

கர்ப்ப காலம் முழுவதும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். எப்போதாவது புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது கூட கருவின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவித்து, அது பிரசவத்தின் பொழுது சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

அதிதீவிரம் கொண்ட உடற்பயிற்சி 

கர்ப்ப காலத்தில் ஆக்டிவாக இருப்பது முக்கியம் தான் என்றாலும் கூட அளவுக்கு அதிகமான தீவிரம் கொண்ட ஓடுதல் அல்லது பளு தூக்குதல் போன்றவற்றில் ஈடுபடுவது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆபத்தானது. எனவே எந்த விதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 208

    0

    0