கிரீன் டீயை இந்த மாதிரி குடித்தால் தான் உடல் எடை குறையும்!!!

Author: Hemalatha Ramkumar
16 June 2022, 10:49 am

கிரீன் டீ சில காலமாக எடை இழப்பு உணவுகள் மற்றும் பானங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ‘டயட்’ என்ற வார்த்தையை குறிப்பிடும்போது, கிரீன் டீ என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது.

ஆனால் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சக்தியாக அறியப்படும் கிரீன் டீ உண்மையில் உடல் எடையை குறைக்க உதவுமா?

கிரீன் டீக்கும் எடை இழப்புக்கும் உள்ள தொடர்பு:-
கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்களின் வளமான மூலமாகும். ஆனால் அதில் நிரூபிக்கப்பட்ட எடை இழப்பு அல்லது கொழுப்பு இழப்பு பொருட்கள் எதுவும் இல்லை.

காமெலியா சினென்சிஸ் செடியில் இருந்து தயாரிக்கப்படும் கிரீன் டீ, பதப்படுத்தப்படாத, புளிக்காத இலைகளை காய்ச்சும்போது கிடைக்கிறது. இது மரகத பச்சை நிறத்தில் இருப்பதால் அத்தகைய பெயரைப் பெறுகிறது.

பல ஆய்வுகள் கிரீன் டீ உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளை நிறைவுசெய்யும் என்று கூறியுள்ளது. இது மறைமுகமாக எடை இழப்புக்கு பங்களிக்கிறது. ஏனெனில் நீங்கள் ஒரு சூடான திரவத்தை குடிப்பதால் பசியைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் உங்கள் கிரீன் டீயில் டன் கணக்கில் தேன் சேர்க்கப் போகிறீர்கள் என்றால், மறுபரிசீலனை செய்யுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் உண்மையில் எடை அதிகரிக்கலாம்.

அப்படியானால், கிரீன் டீ சாப்பிடும் போது ஒருவர் மனதில் கொள்ள வேண்டியது என்ன?
அதிக அளவு கிரீன் டீ குடிப்பது காஃபின் உள்ளடக்கம் காரணமாக பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, மிதமான அளவுகளில் குடிப்பது முக்கியம்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!