மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்: மார்பக புற்றுநோய் வர இருப்பதை உணர்த்தும் ஆரம்ப அறிகுறிகள்!!!
Author: Hemalatha Ramkumar4 October 2024, 4:19 pm
அக்டோபர் மாதம் உலக அளவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இன்றளவில் பல பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நோயிலிருந்து மீண்டவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவும், நோயை எதிர்த்து போராடி வருபவர்களுக்கு போதுமான ஆதரவு இருக்கிறது என்பதை உணர்த்தவும் மற்றும் நோயின் காரணமாக இறந்தவர்களை நினைவுகூறவும் இந்த மாதம் அனுசரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய் பற்றி அதிக அளவில் பேசப்பட்டாலும் பல பெண்கள் அது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். எனவே இந்த பதிவில் மார்பக புற்றுநோயின் ஒரு சில ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன மற்றும் அது ஏற்படாமல் தவிர்ப்பதற்கான சில குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.
மார்பகங்களில் புதிய கட்டிகள்
மார்பக திசுக்களில் ஏற்படும் மாற்றங்கள் ஃபைப்ரோ சிஸ்ட்டிக் மாற்றங்கள் என்று அழைக்கப்படுகிறது. இது மார்பக புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது.
வீக்கம்
ஆறு வாரங்களுக்குள் உங்களுடைய மார்பகம் வீங்கி காணப்பட்டால் அது கொழுப்பு நெக்ரோசிஸ் காரணமாக ஏற்படலாம். இது நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.
மார்பகத்தை சுற்றி எரிச்சல்
மார்பகம் மற்றும் அல்லது அதனை சுற்றியுள்ள பகுதியில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படுமாயின் அது ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக ஏற்படுகிறது. இதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
திடீர் வலி
மார்பகத்தில் சீழ் சேகரிக்கப்பட்டால் அதனால் தாங்க முடியாத வலி உண்டாகும். இது பொதுவாக பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது.
மேலும் படிக்க: உங்க சாப்பாட்டுல இருக்க ஊட்டச்சத்துக்கள் முழுசா உங்களுக்கு கிடைக்க காலை எழுந்ததும் இத மட்டும் குடிங்க!!!
மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் மற்றும் அதன் சிகிச்சைகள் ஒருபுறம் இருந்தாலும் அதனை தவிர்ப்பதற்கான ஒரு சில வழிகளும் உள்ளன. அதனை பெண்கள் அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். ஆகவே மார்பக புற்றுநோயை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
ஆரோக்கியமான உடல் எடை
ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சரியான உடல் எடையை பராமரிப்பது அவசியம். அதே நேரத்தில் இது மார்பக புற்றுநோய் உட்பட பல்வேறு விதமான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.
ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவில் குறைகிறது. முடிந்த அளவு அதிக காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுங்கள்.
உடலை ஆக்டிவாக வைத்துக் கொள்வது
உடற்பயிற்சி செய்வது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக உங்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதை உங்களால் பல மடங்கு தடுக்க முடியும்.
ஹார்மோன் சிகிச்சையை தவிர்ப்பது
மெனோபாஸ் ஹார்மோன் சிகிச்சையை முடிந்த அளவு தவிர்ப்பது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க உதவும்.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் மார்பக புற்றுநோய் ஏற்படுவதை நம்மால் ஓரளவு தடுக்க முடியும். அதே சமயத்தில் மார்பக புற்றுநோய்க்கான ஆரம்பகால அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொள்வது நோயை விரைவில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெறுவதற்கு உதவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.