ஆண்களே! உங்கள் உதடுகளை சிகப்பழககோடு வைக்க உதவும் லிப்கேர் டிப்ஸ்…!!!
Author: Hemalatha Ramkumar20 November 2024, 12:52 pm
உதடு பராமரிப்பு என்பது ஆண்கள் உட்பட அனைவருக்கும் அவசியமானது. ஆனால் பல ஆண்கள் தங்களுடைய உதடுகளுக்கு போதுமான அளவு கவனிப்பு கொடுப்பதே கிடையாது. தற்போது குளிர்காலம் வந்து விட்டதால் உதடுகள் வறண்டு, விரிசல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சரியான உதடு பராமரிப்பு இந்த மாதிரியான பிரச்சனைகளை தவிர்த்து உங்கள் உதடுகளை ஆரோக்கியமாக வைக்கும்.
ஆண்கள் பெரும்பாலும் கடினமான வானிலையை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். காற்று, சூரியன் மற்றும் குளிர்ந்த வெப்பநிலை ஆகியவை உதடுகளில் விரிசல் ஏற்படுத்தி அதனை தோலுரிக்க செய்யலாம். இது பார்ப்பதற்கு அழகாக இல்லை என்பதையும் தாண்டி இது வலியையும் ஏற்படுத்தும். எனவே உதடுகளை மாய்சரைஸ் செய்து சேதத்தில் இருந்து அவற்றை பாதுகாப்பது மிகவும் அவசியம்.
ஆண்களின் உதடுகளை பொருத்தவரை வறட்சி என்பது அவர்கள் அடிக்கடி அனுபவிக்கும் ஒன்று. இதனை சரியாக கவனிக்காவிட்டால் அதனால் விரிசல் மற்றும் ரத்த கசிவு ஏற்படலாம். உதடுகளில் மெலனின் இல்லாத காரணத்தால் அது மிக எளிதாக சூரியன் சேதத்திற்கு ஆளாகும். எனவே SPF கொண்ட லிப் பாம் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும் UV கதிர்களுக்கு எதிராக உதடுகளை பாதுகாக்கும்.
ஆண்களுக்கான எளிமையான உதடு பராமரிப்பு வழக்கம்
ஒரு அடிப்படை உதடு பராமரிப்பு வழக்கத்தை மேற்கொள்வதற்கு உங்களுக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது, அதே நேரத்தில் குறைவான முயற்சியே போதுமானது. முதலில் வாரம் ஒரு முறை உதடுகளில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு அதனை எக்ஸ்ஃபோலியேட் செய்யுங்கள். இதற்கு நீங்கள் ஒரு சாப்டான டூத் பிரஷ் அல்லது ஸ்க்ரப் பயன்படுத்தலாம். பின்னர் மாய்சரைசர் கலந்த லிப் பாமை உதடுகளுக்கு தடவுங்கள்.
இதையும் படிக்கலாமே: இந்த ஒரு பழக்கத்தை ஃபாலோ பண்ணாலே தினமும் காலையில ஃபிரஷா எழுந்திருக்கலாம்!!!
சரியான லிப்பாமை தேர்வு செய்தல்
லிப்பாமை வாங்கும் பொழுது பீஸ்வாக்ஸ், ஷியா பட்டர் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்கள் இருக்கிறதா என்பதை கவனிக்கவும். இந்த இயற்கை பொருட்கள் உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கும். செயற்கை வாசனைகள் அல்லது நிறங்கள் அடங்கிய ப்ராடக்டுகள் வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் அது உங்கள் உதடுகளில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
தண்ணீர் மற்றும் உணவு
உதடுகளின் ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் மிகவும் அவசியமானது. உங்கள் உடல் மற்றும் உதடுகளுக்கு போதுமான நீர்ச்சத்து கிடைக்க நாள் முழுவதும் அதிக அளவு தண்ணீர் பருகுங்கள். அதேபோல வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கிய சரிவிகித உணவை சாப்பிடுவது ஆரோக்கியமான சருமம் மற்றும் உதடுகளுக்கு உதவும். வைட்டமின் E மற்றும் வைட்டமின் C போன்ற உணவுகள் குறிப்பாக இதற்கு பலனளிக்கும்.
ஆண்களுக்கான லிப் கேர் ப்ராடக்டுகள்
ஆண்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பல உதடு பராமரிப்பு பொருட்கள் உள்ளன. இந்த ப்ராடக்டுகளில் இயற்கையான மூலப் பொருட்கள் அடங்கிய அதே நேரத்தில் SPF பாதுகாப்பு வழங்கும் ஒன்றை வாங்கி பயன்படுத்துவது பலனளிக்கும்.