பொடுகு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சில வீட்டு வைத்தியங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
2 December 2022, 4:54 pm

பொதுவாக மழை மற்றும் பனி காலத்தில் பொடுகு தொல்லை அதிகமாக இருக்கும். இதனை சரி செய்யா விட்டால் தலைமுடிக்கு பல விதமான பிரச்சினைகள் வரக்கூடும். ஆகவே பொடுகு தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்களை இந்த பதிவில் பார்ப்போம்:-

●ஆயுர்வேதத்தில் சர்வரோகநிவாரணி என அழைக்கப்படும் வேப்பிலை பொடுகு தொல்லைக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இதற்கு வேப்ப எண்ணெயை எடுத்து இரவு படுக்க போகும் முன் தலைமுடியில் தடவிக் கொண்டு காலை எழுந்ததும் கழுவினால் பொடுகு தொல்லை நீங்கும்.

●வைட்டமின் C, சிட்ரிக் அமிலம் மற்றும் சின்க் நிறைந்த எலுமிச்சை சாற்றை ஆலிவ் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்சினையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

●பொடுகு தொல்லையில் இருந்து விடுபட சோற்றுக் கற்றாழை பெருமளவில் உதவுகிறது. கற்றாழை ஜெல்லை தலைமுடியில் தடவி சிறிது நேரம் கழித்து தலை குளித்து வந்தால் பொடுகு தொல்லை போகும். எளிதில் சளி, காய்ச்சல் பிடிப்பவர்கள் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளவர்கள் இந்த தீர்வை தவிர்க்க வேண்டும்.

●நெல்லிக்காயை அரைத்து அதனுடன் பொடித்த துளசி இலையை கலந்து தலையில் தடவுங்கள். இதனை 30 நிமிடங்கள் ஊற வைத்த பின் தலைமுடியை அலசவும். இது பொடுகு தொல்லையில் இருந்து உங்களை மீட்க உதவும்.

●தலைமுடிக்கு பிரிங்கராஜ் எண்ணெய் பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை இருக்காது. அதோடு இளநரை பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். மேலும் முடி ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.

●ஊற வைத்த வெந்தயத்துடன் தயிர், எலுமிச்சை மற்றும் மருதாணி சேர்த்து அரைத்து தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்து முடியை அலசி வர பொடுகு தொல்லை சரியாகும்.

●நீங்கள் தலை குளிக்கும் நீரில் சோடா உப்பு கலந்து குளித்து வந்தாலும் பொடுகு பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி