சளி, இருமலுக்கு பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும் சிறந்த வீட்டு வைத்தியம்!!!

Author: Hemalatha Ramkumar
16 October 2024, 10:49 am

சளி மற்றும் இருமல் போன்ற பொதுவான உடல்நல பிரச்சினைகளுக்கு பலர் வீட்டு வைத்தியங்களை விரும்புகின்றனர். தற்போது மழைக்காலம் வந்து விட்டதால் சளி மற்றும் இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுவது வழக்கம். எனவே இது மாதிரியான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கவும், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவக்கூடிய ஒரு அற்புதமான வீட்டு வைத்தியம் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். 

இதற்கு உங்களிடம் வெங்காயம் மற்றும் சிறிதளவு தேன் இருந்தால் போதுமானது. முதலில் வெங்காயத்தை வெட்டி அதிலிருந்து சாறு வெளிவரும் வகையில் இடி உரலில் வைத்து ஓரளவு ஒன்றும் பாதியுமாக இடித்துக் கொள்ளவும். பின்னர் அதனை ஒரு ஏர்டைட் கண்டைனரில் போட்டு தேனால் நிரப்பும். நன்றாக குலுக்கி டப்பாவை மூடி விடுங்கள். இது ஒரு சில மணி நேரங்களுக்கு அப்படியே இருக்கட்டும். 

உங்களுக்கு உடல்நல குறைவு ஏற்படுவதற்கான முதல் அறிகுறி ஏற்படும் போது இந்த கலவையில் இருந்து ஒரு சில டீஸ்பூன் எடுத்து சாப்பிடுங்கள். இந்த வெங்காயம் – தேன் என்பது தொண்டைப்புண், இருமல் மற்றும் சளி போன்றவற்றிற்கு பல நூற்றாண்டுகளாக மிகவும் பிரபலமான ஒரு வீட்டு சிகிச்சையாக அமைகிறது. அதுமட்டுமல்லாமல் தொண்டைப்புண், சளி மற்றும் இருமலை ஆற்றவும், அவை மேலும் ஏற்படாமல் தவிர்ப்பதற்கும் வெங்காய மற்றும் தேன் கலவை ஆயுர்வேதத்திலும் ஒரு அற்புதமான சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

Health tamil

இதையும் படிக்கலாமே: இத அளவா குடிச்சா ஹார்ட் அட்டாக் வராம தப்பிச்சுக்கலாம்!!!

இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு இந்த கலவையில் இருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இது மிகவும் எளிமையான சிகிச்சையாக இருந்தாலும் பருவ கால நோய்களை எதிர்த்து போராடுவதற்கு ஒரு இயற்கையான வழியாக அமைகிறது. இது சம்பந்தமான அறிவியல் ஆராய்ச்சியும் செய்யப்பட்டுள்ளது. வெங்காய மற்றும் தேனாகிய இரண்டுமே இது மாதிரியான சளி, இருமல் மற்றும் தொண்டைப்புண் அறிகுறிகளை தணிப்பதற்கான பண்புகளை கொண்டுள்ளன என்று ஆய்வுகள் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

வெங்காய சாற்றுடன் தேன் கலந்து ஒரு சிரப்பை உருவாக்கி பயன்படுத்துவது தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும். வெங்காயத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இவை தொற்றுகளை எதிர்த்து போராடவும் தொண்டையில் ஏற்படும் எரிச்சலை குறைக்கவும் உதவுகின்றது. அதே நேரத்தில் தேனில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் தொண்டையை ஆற்றுவதற்கும், இருமலை கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது. 

வெங்காயத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் சல்பர் காம்பவுண்டுகள் இருப்பதால் இது வீக்கத்தை குறைத்து, சளியை வெளியேற்றி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மறுபுறம் தேனானது ஒரு சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு ஏஜெண்டாக செயல்பட்டு ஆற்றும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனினும் எந்த ஒரு மருத்துவ சிகிச்சைக்கும் பதிலாக இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுடைய அறிகுறிகள் தொடர்ச்சியாக இருந்தாலோ அல்லது மோசமானாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 151

    0

    0