ஹெவி மீல்ஸ் சாப்பிட்ட பிறகு உண்டாகும் வயிற்று உப்புசத்தை 5 நிமிடங்களில் போக்க அசத்தலான டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
5 December 2024, 6:37 pm

பண்டிகை, கொண்டாட்டம், விசேஷம் என்று எதுவாக இருந்தாலும் நிச்சயமாக அன்று தடபுடலான விருந்து இருக்கும். ஆனால் இந்த மாதிரியான ஹெவி மீல்ஸ் சாப்பிட்ட பிறகு ஒரு சிலருக்கு வயிறு உப்புசமாக அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் இது எதனால் ஏற்படுகிறது? இதற்கான பதில் என்பது அதிக அளவு உணவை நம்முடைய உடல் செயல்படுத்தும் முறையில் அமைகிறது. நாம் அதிக உணவு சாப்பிடும் பொழுது நம்முடைய வயிறு அதனை செரிமானம் செய்வதற்கு போராடுகிறது. இது அசௌகரியம், வயிற்று உப்புசம் மற்றும் செரிமான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. 

அளவுக்கு அதிகமான கொழுப்பு அல்லது மசாலா நிறைந்த உணவு செரிமானத்தை மெதுவாக்கி, வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தும். நம்முடைய செரிமான அமைப்புக்கு கூடுதல் பராமரிப்பு அல்லது அக்கறை தேவை என்பதற்கான ஒரு நினைவூட்டலே இந்த அசௌகரியம். எனவே ஹெவி மீல்ஸ் சாப்பிட்ட பிறகு உங்களுடைய செரிமானத்தை எளிமைப்படுத்துவதற்கு உதவும் சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு சிறிய நடை பயிற்சி 

இது எளிமையானதாக தோன்றினாலும் ஹெவி மீல்ஸ் சாப்பிட்ட பிறகு சிறிய தூரத்திற்கு நடை பயிற்சி செல்வது உங்களுடைய செரிமானத்தை தூண்டும். இந்த குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சி செரிமானத்தை அதிகமாக்கி, வயிற்று உப்புசத்தை போக்கி, அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் தரும். 10 முதல் 15 நிமிட நடைப்பயிற்சி கூட நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

சோம்பு 

சோம்பு விதைகளை சாப்பிடுவது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிப்பதற்கான எளிமையான அதே நேரத்தில் பழங்கால ஒரு தீர்வு. இந்த விதைகளில் உள்ள இயற்கை பண்புகள் வயிற்று உப்புசம், வாயு தொல்லை மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது. இதற்கு நீங்கள் ஒரு டீஸ்பூன் அளவு சோம்பு விதைகளை ஹெவி மீல்ஸ் சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டும்.

இதையும் படிச்சு பாருங்க:  வாரம் ஒரு பழம் சாப்பிட்டா போதும்… ஹெல்த் வேற லெவெலா இருக்கும்!!!

வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது மூலிகை டீ 

ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவ ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது மூலிகை தேநீர் குடிப்பது மற்றுமொரு எளிமையான குறிப்பு. வெதுவெதுப்பான தண்ணீர் செரிமானத்தை தூண்டி, வயிற்று உப்புசத்தை போக்கி, வயிற்றை அமைதிப்படுத்தும். அதேபோல புதினா, இஞ்சி அல்லது சாமந்திப்பூ போன்றவை கொண்டு செய்யப்பட்ட மூலிகை தேநீர் செரிமானத்தை சிறந்த முறையில் நடைபெறுவதற்கு உதவும்.

கீழே படுப்பதை தவிர்க்கவும் 

ஒரு நல்ல ஹெவி மீல்ஸ் சாப்பிட்ட பிறகு படுக்க வேண்டும் என்பதே நம்முடைய முதல் ஆசையாக இருக்கும். ஆனால் அவ்வாறு செய்வது செரிமானத்தை இன்னும் மோசமாக்கி, அசௌகரியம், வயிற்று உப்புசம் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். எனவே அதற்கு பதிலாக சாப்பிட்டு முடித்த பிறகு குறைந்தபட்சம் 2 முதல் 3 மணி நேரங்களுக்கு நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கொள்வது செரிமானத்தை தூண்டி வயிற்றில் உள்ள அமிலம் உணவுக் குழாய்க்கு மீண்டும் திரும்புவதை தவிர்க்க உதவும்.

எலுமிச்சை 

ஹெவி மீல்ஸ் சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு எலுமிச்சை சாப்பிடுவது செரிமானத்தை தூண்டும். எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் செரிமான நொதிகளை தூண்டி, உணவை உடைத்து சரி வயிற்று உப்புசத்தை போக்கும். எலுமிச்சையில் உள்ள இயற்கையான அமில பண்பு செரிமான அமைப்பை சமநிலைப்படுத்த உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 95

    0

    0