நகங்கள் உடைந்து போச்சேன்னு இனி கவலையே வேணாம்… அத ஈசியா சரிசெய்ய செம ஐடியா இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
17 January 2025, 3:51 pm

நகங்கள் உடைந்து விட்டால் அது நமக்கு ஒரு விதமான அசௌகரியத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் எரிச்சலூட்டும் விதமாக அமையலாம். நகங்களில் ஒரு சிறிய விரிசல் இருந்தால் கூட அது நமக்கு கோபத்தை உண்டாக்கும். ஒரு சில நேரங்களில் இதனை சமாளிப்பது நமக்கு சவாலான விஷயமாக அமையலாம். ஆனால் உடைந்த நகத்தை சரி செய்வதற்கு எளிமையான சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.

வீட்டில் இருக்கக்கூடிய ஒரு சில அடிப்படையான பொருட்களை வைத்தே உடைந்த நகங்களை சரி செய்து உங்களுடைய நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தலாம். அவ்வாறான சில எளிமையான வழிகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

டீ பேக்குகள் 

உடைந்த நகங்களை சரி செய்வதற்கு டீ பேக் முறை அதிக அளவில் பரிந்துரை செய்யப்படுகிறது. இது குறிப்பாக சிறிய அளவிலான விரிசல்களுக்கு கூட உதவியாக இருக்கும். எடை குறைவாகவும், அதே நேரத்தில் வலிமையாகவும் இருக்கும். இது உடைந்த நகங்களை சரி செய்வதற்கு சிறந்த முறையில் உதவுகிறது.

நெயில் குளூ 

உடைந்த நகத்தை சரி செய்வதற்கு நீங்கள் நெயில் குளூவை கூட பயன்படுத்தலாம். பெரிய அளவில் நகங்கள் உடைந்து விட்டாலோ அல்லது இரண்டாக உடைந்தாலோ இது உங்களுக்கு உதவியாக இருக்கும். உடைந்த பாகங்களை ஒன்றாக இணைப்பதற்கு இந்த நெயில் குளூ உதவுகிறது. அதே நேரத்தில் எந்த ஒரு சிக்கல்களையும் ஏற்படுத்தாமல் ஆற்றும் செயல்முறையை விரைவுப்படுத்துகிறது.

இதையும் படிக்கலாமே : வயிறு ஆரோக்கியத்தை மோசமாக்கும் பழக்க வழக்கங்கள்!!!

பட்டு மடிப்பு 

மோசமான முறையில் நகங்கள் உடைந்து போனாலோ அல்லது பெரிய விரிசல்கள் ஏற்பட்டாலோ இந்த சில்க் அல்லது ஃபைபர் ராப்பர்களை நீங்கள் உபயோகிக்கலாம். இது நகங்களுக்கு வலிமையையும், ஆதரவையும் சேர்க்கிறது. இது பெரும்பாலும் சலூன்களில் பயன்படுத்தப்படுகிறது. பார்ப்பதற்கு இயற்கையான நகங்கள் போலவே இருக்கும். வீட்டில் இருந்தாலும் கூட இதனை நீங்கள் எளிமையாக பயன்படுத்தலாம்.

நக பாலிஷ் 

உடைந்த நகங்களை விரைவாக சரி செய்ய நினைப்பவர்களுக்கு இந்த நக பாலிஷ் ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கும். சிறிய அளவிலான விரிசல்களுக்கு இது சிறந்தது. ஆனால் பெரிய அளவிலான விரிசல்களுக்கு இது சரியானதாக இருக்காது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Suchitra Tease Ajithkumar வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? வார்த்தையை விட்ட பிரபலம் : ரசிகர்கள் ஆவேசம்!
  • Leave a Reply