மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்க மறக்காம இந்த பழங்களை சாப்பிடுங்க!!!

Author: Hemalatha Ramkumar
9 July 2022, 2:08 pm

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்க மிகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது முக்ககயம். மழைக்காலங்களில் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், அனைத்து வகையான தொற்று நோய்களுக்கும் நம்மை ஆளாக்குகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், பருவகால மாற்றங்களின் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க வேண்டியது அவசியம். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய சில பழங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மாதுளை:
ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு பழமான இது பருவமழையின் போது உடலுக்கு மிகவும் தேவையான பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆகவே, இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழங்கள்:
வாழைப்பழங்கள் உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலுக்கான சரியான அளவு கார்போஹைட்ரேட்டுகளை வழங்குகிறது. உங்கள் தினசரி நார்ச்சத்து தேவையில் 10 சதவீதம் வாழைப்பழத்தில் இருந்து வருகிறது.

ஆப்பிள்கள்:
குர்செடின் எனப்படும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்த ஆப்பிள்கள், நோய்த்தொற்றுகளுக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

பேரிக்காய்:
பேரீக்காயில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளன. ஒரு பேரிக்காயில் தினசரி வைட்டமின் சி தேவையில் 12 சதவீதத்தை வழங்குகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது எடையைக் குறைக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது.

நாவல் பழம் மற்றும் செர்ரி:
இந்த பருவகால பழங்க நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று. இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!