கோபம் நம்முடைய உடல் நலத்திற்கு நல்லதல்ல என்பதை யாரும் நமக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. கோபமாக இருப்பது நம்முடைய ரத்தத்தை கொதிக்க செய்து உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் அளவுக்கு அதிகமாக கோபப்பட்ட பிறகு உங்களுடைய கார்டிசால் அளவுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு 7 மணி நேரம் ஆகுமாம். இதனால் செரிமானம், மூளை செயல்பாடு, நச்சு நீக்கம் மற்றும் தைராய்டு செயல்பாடு ஆகியவை மோசமாக பாதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் ரத்த சர்க்கரை அளவுகளிலும் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த பதிவில் அளவுக்கு அதிகமான கோபம் நம்முடைய உடல் நிலையை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
மன அழுத்தம் நிறைந்த அல்லது எரிச்சலூட்டும் ஏதாவது ஒரு நிகழ்வு நடக்கும் பொழுது நமக்கு கோபம் வருவது இயல்பான ஒன்று. ஆனால் அளவுக்கு அதிகமாக கோபப்படுவது நம்முடைய மனநிலையை மட்டுமல்லாமல் உடல் நலத்தையும் பாதிக்கிறது. அளவுக்கு அதிகமான கோபம் நம்முடைய உடலில் ஃபைட் அல்லது ஃபிளைட் (Fight or Flight) விளைவை ஏற்படுத்துகிறது. அதாவது ஒன்று சண்டையிட வேண்டும் அல்லது தப்பி ஓடிவிட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். இந்த விளைவானது நம்முடைய உடலில் உள்ள ஆட்டோமேட்டிக் நரம்பு அமைப்பு மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது.
முதலில் மூளை ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்து அட்ரீனலின் மற்றும் கார்ட்டிசால் ஹார்மோன்களை வெளியிட சொல்லி ஹைப்போதலாமஸுக்கு சிக்னல்கள் அனுப்பப்படும். இந்த ஹார்மோன்கள் இதயத்துடிப்பை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை உயர்த்தும். இதனால் நம்முடைய தசைகளுக்கு அதிக ரத்தம் உந்தி தள்ளப்படும். இப்போது உங்களுடைய சுவாசம் விரைவாகும், உடலுக்கு அதிக ஆக்சிஜன் விநியோகிக்கப்படும். மேலும் உங்களுக்கு உடனடி ஆற்றலை வழங்குவதற்கு ரத்த சர்க்கரை அளவுகளும் அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே: ஆரோக்கியத்தையும் கொடுத்து அழகையும் மேம்படுத்தும் கொத்தமல்லி சாற்றை மிஸ் பண்ணிடாதீங்க!!!
கோபம் உங்களுடைய தசைகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக கழுத்து, தோள்பட்டை மற்றும் தாடை போன்ற பகுதிகளில் அழுத்தம் உண்டாகும். உங்களுடைய செரிமானம் குறைவாகும். மேலும் உங்களுக்கு சில சமயங்களில் குமட்டல் உணர்வு கூட வரலாம். செரிமான அமைப்புக்கு குறைவான இரத்த ஓட்டம் காரணமாக வயிற்று அசைவுகரியம் ஏற்படலாம். நீண்ட நேரத்திற்கு அளவுக்கு அதிகமாக கோபப்படுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். உங்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
மேலும் இது பதட்டம் அல்லது மனசோர்வுக்கு வழிவகுக்கலாம். அதுமட்டுமல்லாமல் கோபமானது உங்களுக்கு எரிச்சல், சோகம், அளவுக்கு அதிகமாக யோசித்தல், குற்ற உணர்ச்சி போன்ற உணர்ச்சிகளை உண்டாக்கும். இது உங்களுடைய மன ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி, மனசோர்வு, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும். மேலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்துவது அல்லது தெளிவாக யோசிப்பது போன்றவற்றில் சிக்கல்களை அனுபவிக்க ஆரம்பிப்பீர்கள்.
ஆகவே உங்களுடைய கோப அளவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலையில் கூட அமைதியை காக்கவும். கோபத்தை குறைப்பதற்கு ஆழ்ந்த மூச்சு பயிற்சி, தியானம் அல்லது யோகா போன்றவற்றை நீங்கள் செய்யலாம். இவ்வாறு செய்வது கோபம் காரணமாக உங்கள் உடலுக்கு ஏற்படும் விளைவுகளை குறைக்க உதவும்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.