உப்பு கொஞ்சம் தூக்கலா இருந்தா தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பவர்களை பயமுறுத்த காத்திருக்கும் வயிறு புற்றுநோய்!!! 

Author: Hemalatha Ramkumar
16 November 2024, 11:13 am

உப்பு என்பது நம்முடைய வாழ்வின் பல்வேறு விஷயங்களில் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. உணவு முதல் தொழிற்சாலைகள்  வரை உப்பின் பயன்பாடுகள் ஏராளம். “உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே. இதை வைத்து உப்பு உணவுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். உப்பு நமது உடலில் உள்ள திரவ சமநிலையை சீராக்குதல், நரம்பு செயல்பாட்டை பராமரித்தல், எலும்புகளுக்கு வலு சேர்த்தல், ரத்த அழுத்தத்தை குறைத்தல் போன்ற பல நன்மைகளை தருகிறது. இன்னும் சொல்லப்போனால் உப்பு நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமான ஒரு பொருள். எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலை, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நரம்பு கடத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு உப்பு உதவுகிறது. ஆனால் உப்பை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஹைப்பர் டென்ஷன், வயிறு புற்றுநோய், இதய நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். 

2019 ஆம் ஆண்டில் தி லான்செட்டில் வெளியான ஆய்வில் அதிக உப்பின் காரணமாக பலருக்கு வயிறு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது  கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார மையத்தின் படி, ஒரு நாளைக்கு ஒருவர் 5 கிராமுக்கும் குறைவான உப்பையே சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் மட்டுமே புற்றுநோய் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கலாம். 

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் ஊறுகாய் போன்ற அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளில் நைட்ரேட்டுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருக்கலாம். இது வயிறு புற்றுநோயுடன் தொடர்புடையது. இந்த பொருட்களுடன் அதிக உப்பும் சேர்ந்து புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றது. ஆரோக்கியமான சரிவிகித உணவு மற்றும் குறைவான உப்பு ஆகியவை வயிறு புற்றுநோய் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. 

வயிறு புற்றுநோய் ஏற்படுவதை நம்மால் முற்றிலுமாக தவிர்க்க முடியாது. எனினும் ஒரு சில வாழ்க்கைமுறை மாற்றங்களை பின்பற்றுவதன் மூலமாக அதற்கான சாத்தியங்களை குறைக்கலாம். 

சரிவிகித உணவு 

வயிறு புற்றுநோய் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு உதவும் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றில் ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து அதிகம். மேலும் பூண்டு, வெங்காயம், இஞ்சி மற்றும் மஞ்சள் போன்றவை புற்றுநோய்க்கு எதிராக சண்டையிடும் பண்புகளை கொண்டுள்ளன. பதப்படுத்தப்பட்ட மற்றும் புகையூட்டப்பட்ட இறைச்சிகளை தவிர்த்து விடுவது நல்லது. மேலும் ஒரு நாளைக்கு 6 கிராமுகாகும் குறைவான உப்பு சாப்பிடுவது அவசியம். 

தண்ணீர்

நமது உடலில் உள்ள நச்சு நீக்க செயல்முறை சுமூகமாக நடைபெற நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது அவசியம். 

ஆரோக்கியமான உடல் எடை மற்றும் உடற்பயிற்சி ஆரோக்கியமான உடல் எடையை கொண்டிருத்தல் மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்வது வயிறு புற்றுநோய் ஏற்படுவதை குறைப்பதில் மிகப்பெரிய பங்கை கொண்டுள்ளது. ஏனெனில் வயிறு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை உடற்பருமன் அதிகரிக்கிறது. தினமும் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற பயிற்சிகளை குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது செய்யுங்கள். 

இதையும் படிக்கலாமே: தலைமுடி, சருமம், உடல் ஆரோக்கியம்… 3 இன் 1 பலன்கள் தரும் கருப்பு விதைகள்!!!

புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் 

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகிய இரண்டுமே வயிறு புற்றுநோயை ஏற்படுத்தலாம். புகைபிடிப்பதை முற்றிலுமாக நிறுத்துவது வயிறு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை 50% குறைக்கும். அதே போல மது அருந்துவதை குறைத்துக் கொள்வதும் அவசியம். புகைபிடித்தல் மற்றும் மது ஆகிய இரண்டும் வயிற்றின் புறணியில் எரிச்சலை ஏற்படுத்தி புற்றுநோயை தூண்டும். புகையிலை ப்ராடக்டுகளில் உள்ள நிக்கோட்டின் மற்றும் பிற கெமிக்கல்கள் வயிற்றில் நாள்பட்ட வீக்கத்தை உண்டாக்கும். இதனால் புற்றுநோய் வரலாம். 

வழக்கமான ஹெல்த் செக்கப் 

அடிக்கடி ஹெல்த் செக்கப் செய்து கொள்வது வயிறு புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்க உதவும். எனவே உங்கள் குடும்பத்தில் யாருக்காவது வயிறு  புற்றுநோய் இருந்தாலோ அல்லது உங்களுக்கு வயிறு போற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலோ வழக்கமான முறையில் நீங்கள் ஹெல்த் செக்கப் செய்து கொள்ள வேண்டும். மேலும் உங்களுடைய ரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதும் அவசியம். 

அடிவயிற்றில் வலி, உணவு  மற்றும் தண்ணீரை விழுங்குவதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் வயிறு புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையை வழங்குவது புற்றுநோயிலிருந்து மீண்டு வருவதற்கு மிக மிக முக்கியம்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!