ஆரோக்கியம்

PCOS அறிகுறிகளை எளிதில் சமாளிக்க உதவும் உடற்பயிற்சிகள்!!!

PCOS என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்பது பெண்களின் ஹார்மோன்களை பாதிக்கும் ஒரு பொதுவான மருத்துவ நிலையாகும். இதன் காரணமாக சீரற்ற மாதவிடாய், அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு மற்றும் மோசமான சூழ்நிலைகளில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது. இது பற்றி தெரியாதவர்களுக்கு PCOS என்பது அடிப்படையில் ஒரு ஹார்மோன் சமநிலையின்மை. இந்த நிலையின் போது பெண்களின் அண்டகங்கள் அளவுக்கு அதிகமான ஆண் ஹார்மோன்களை  உற்பத்தி செய்யும். 

தற்போது பல பெண்கள் PCOS காரணமாக குழந்தையின்மை பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர். இது அவர்களுடைய மனநிலையை மோசமாக பாதிக்கிறது. இதனால் உடல் ஆரோக்கியம் இன்னும் மோசமாகிறது. பிPCOS பிரச்சனையை உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமாகவே நம்மால் கட்டுப்படுத்த முடியும். எனவே இந்த பதிவில் PCOS அறிகுறிகளை எளிதில் சமாளிக்க உதவும் சில உடற்பயிற்சிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

யோகா 

யோகா என்பது சுவாச கட்டுப்பாடு மற்றும் தியானம் ஆகியவற்றுடன் இணைந்த பல விதமான தோரணைகள் அடங்கிய உடற்பயிற்சியின் சிறந்த வடிவமாக கருதப்படுகிறது. இது மன அழுத்தத்தை குறைத்து, PCOS காரணமாக ஏற்படும் அறிகுறிகளை தணிக்கிறது. குறிப்பிட்ட சில யோகாசனங்கள் செய்வது மாதவிடாய் சுழற்சியை சீராக்கி, உடலின் நெகிழ்வு தன்மையை அதிகரிக்கிறது. மேலும் மனதிற்கு ஓய்வு கிடைக்கிறது. 

அதிக தீவிரம் கொண்ட பயிற்சி (HIIT)

HIIT என்று சொல்லப்படும் ஹை இன்டென்சிட்டி இன்டர்வெல் டிரெய்னிங் என்பது அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி ஆகும். இது ஒருவருடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. மேலும் பிற வகையான உடற்பயிற்சிகளோடு ஒப்பிடும்போது இது  கொழுப்பை விரைவாக குறைப்பதற்கு உதவுகிறது. 

கார்டியோ வொர்க்-அவுட்டுகள்

விறுவிறுப்பான நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்ற கார்டியோ பயிற்சிகள் உங்களுடைய இதயத்துடிப்பை மேம்படுத்தி, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மேலும் உடல் எடையை சீராக பராமரித்து, இன்சுலின் உணர்திறனையும் மேம்படுத்தும். 

இதையும் படிக்கலாமே: மயோனைஸ் ரொம்ப பிடிக்குமா… உங்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்!!!

நடைபயிற்சி 

இது எளிமையான ஒன்றாக இருந்தாலும் இதன் மூலமாக நமக்கு அதிகப்படியான பலன்கள் கிடைக்கும். இந்த குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சியை உங்களுடைய அன்றாட வாழ்வில் மிக எளிதாக சேர்த்துக் கொள்ளலாம். வழக்கமான முறையில் விறுவிறுப்பான நடை பயிற்சியில் ஈடுபடுவது உங்களுடைய மனநிலையை மேம்படுத்தி, உடல் எடையை சரியாக பராமரிப்பதற்கு உதவும். மேலும் PCOS பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு இன்சுலின் உணர்த்தினரை அதிகரிக்கும். 

பைலேட்ஸ் 

இந்த வகையான உடற்பயிற்சி உங்களுடைய வலிமை, நெகிழ்வு தன்மை  ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மேலும் இது உங்களுடைய தோரணை மற்றும் ஒட்டுமொத்த உடல் அமைப்பை மேம்படுத்துகிறது. உடல் எடையை கட்டுப்படுத்தவும், உடலின் விழிப்புணர்வு திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

10 minutes ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

23 minutes ago

சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!

சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…

47 minutes ago

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

1 hour ago

ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து? பொது இடத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…

சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…

1 hour ago

பிரதமர் மோடி பதவி விலகல்? தேசிய களத்தில் சூடுபிடித்த முக்கிய கருத்து.. பாஜக நிலைப்பாடு என்ன?

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…

2 hours ago

This website uses cookies.