குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிமையான பயிற்சிகள்!!! 

Author: Hemalatha Ramkumar
29 October 2024, 2:17 pm

ஒரு சில குழந்தைகளின் அபார ஞாபக சக்தி நம்மை வியக்க வைக்கலாம். அதுவே ஒரு சில குழந்தைகள் எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் இது ஒரு பிரச்சனையே கிடையாது. இதனை மிக எளிதாக நம்மால் சரி செய்ய முடியும். இது போன்ற குழந்தைகள் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும், அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கும் உதவக்கூடிய சில பயிற்சிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

ஏரோபிக் பயிற்சிகள் விறுவிறுப்பான நடை பயிற்சி, ஜாக்கிங் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகள் இதயத்துடிப்பை அதிகரித்து, மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்கிறது. இதன் மூலமாக ஞாபக சக்தி மற்றும் அறிவு திறன் செயல்பாடு மேம்படுகிறது. தினமும் ஏரோபிக் பயிற்சி செய்வதால் நல்ல ஞாபக சக்தி மற்றும் மன தெளிவு கிடைக்கும் என்பது ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

யோகாசனம் 

உடல் சார்ந்த தோரணைகள், மூச்சு பயிற்சிகள் மற்றும் தியானம் ஆகியவற்றை இணைக்கும் யோகாசனம் நம்முடைய மனநலனுக்கு சிறந்த ஒன்றாக அமைகிறது. தினமும் யோகாசனம் செய்வது உங்களுடைய கவனத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தை குறைத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும் உங்களுக்குள்ள மனசோர்வு குறைந்து ரிலாக்ஸாக உணர்வீர்கள். 

இதையும் படிக்கலாமே: நாள் முழுவதும் எனர்ஜடிக்கா இருக்க நொறுக்கு தீனிக்கு பதிலா இத சாப்பிடுங்க!!!

வலுப்பயிற்சி 

வெயிட் லிஃப்டிங் அல்லது ஸ்குவாட்ஸ் மற்றும் புஷ்-அப் போன்ற உடற்பயிற்சிகளை செய்வது உங்களுடைய மூளையின் திறனை அதிகரிக்கும். இந்த மாதிரியான பயிற்சிகள் அறிவு திறன் செயல்பாட்டை அதிகரித்து, ஞாபக சக்தியை மேம்படுத்தும். அதிலும் குறிப்பாக பெரியவர்களுக்கு இந்த வகையான பயிற்சிகள் அதிக பலன் தரும். 

ஆடல் 

ஆடல் அதிலும் புதிய நடனங்களை நீங்கள் கற்றுக் கொள்ளும் பொழுது அதில் உள்ள ஸ்டெப்புகளை ஞாபகம் வைத்துக் கொள்வது மூளைக்கு சவாலாக அமையும். இது ஞாபக சக்தி மற்றும் ஒருங்கிணைப்புத் திறனை அதிகரிக்கும். மேலும் அதிக கவனிப்பு திறன் மற்றும் அறிவு திறன் செயல்பாடு மேம்படும். இந்த செயல்பாட்டின் போது உங்கள் மூளையின் பல்வேறு பகுதிகள் ஆக்டிவேட் செய்யப்படும். 

தாய் சீ (Tai Chi)

தாய் சை என்பது ஆழமான சுவாசித்தலுடன் கூடிய பொறுமையான பல்வேறு அசைவுகள் கொண்ட ஒரு பயிற்சி. இது உங்களுடைய கவனிப்பு திறனை அதிகரித்து, ஞாபக சக்தியை மேம்படுத்தும். உடல் மற்றும் மனம் சார்ந்த இந்த வொர்க்-அவுட் உங்களுடைய மன அழுத்தத்தை குறைத்து, ஒட்டுமொத்த மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும். 

புதிர்கள் மற்றும் மூளை விளையாட்டுகள் 

உடல் ரீதியாக நீங்கள் வொர்க்-அவுட் செய்யாவிட்டாலும் கூட கிராஸ் வேர்ட், சுடோக்கு போன்ற புதிர்களை தீர்த்து வைப்பது அல்லது மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளில் ஈடுபடுவது உங்களுடைய ஞாபக சக்தியை அதிகரிக்கும். இது மாதிரியான செயல்பாடுகள் பிரச்சனை தீர்க்கும் திறனை அதிகரிக்கும். 

நடைப்பயிற்சி 

நடைபயிற்சியின் போது உங்களை சுற்றி இருக்கும் சூழல், சுவாசம் மற்றும் உடலின் உணர்வுகளில் கவனம் செலுத்துவீர்கள். இது உங்களுடைய மன அழுத்தத்தை குறைத்து, அறிவுத்திறன் செயல்பாட்டை மேம்படுத்தும். இந்த வகையான பயிற்சி உங்களுக்கு மனத் தெளிவை அளித்து, ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும் இதனால் உங்களுடைய மூளை ஆரோக்கியத்திற்கு நீண்ட கால பலன் கிடைக்கும். 

நீச்சல் 

நீச்சல் என்பது எப்பொழுதும் சிறந்த மூளை ஆரோக்கியத்தோடு இணைக்கப்படுகிறது. ஏனெனில் நீச்சல் அடிக்கும் பொழுது புதிய மூளை செல்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் அறிவுத்திறன் செயல்பாடு மேம்படுகிறது. இந்த பயிற்சி மூளைக்கு செல்லும் ஆக்சிஜனை அதிகரிப்பதன் மூலமாக ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. மேலும் என்டார்பின் ஹார்மோன்கள்  வெளியிடப்பட்டு மன அழுத்தம் குறைந்து, உங்களுடைய கவனிப்பு திறன் அதிகரிக்கும்.

  • ஓடிடி-யில் வெளியாகும் தீபாவளி மாஸ் ஹிட் படம்…அட எப்போங்க..!
  • Views: - 173

    0

    0